சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.5 கோடி  பறிமுதல்

Added : அக் 15, 2021
Share
Advertisement
கொடுங்கையூர்:காரில், ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1.5 கோடி ரூபாயை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.சென்னை, கொடுங்கையூர், ஜி.என்.டி., சாலையில், நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் பத்து பைகள் இருந்தன. அதனுள், கட்டு கட்டாக பணம் இருந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார்,

கொடுங்கையூர்:காரில், ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1.5 கோடி ரூபாயை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், ஜி.என்.டி., சாலையில், நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் பத்து பைகள் இருந்தன. அதனுள், கட்டு கட்டாக பணம் இருந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தீவிரமாக விசாரித்தனர்.

விசாரனையில், காரில் வந்தவர்கள், ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த பயாஸ் மற்றும் கோபால் என தெரியவந்தது. காரில் மொத்தம் 1.54 கோடி ரூபாய் இருந்தது.இதற்கு முறையான ஆவணம் ஏதுமில்லாததால், பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த முடிவு செய்துள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பிடிப்பட்ட இருவரிடம், பணம் கொண்டு வந்ததற்கான காரணம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X