பொது செய்தி

தமிழ்நாடு

உத்திரமேரூரில் திருவிளக்கு பூஜை

Added : அக் 15, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூர் துர்கை அம்மன் கோவிலில், உலக நன்மைக்காக, 208 திருவிளக்கு பூஜை நடந்தது.உத்திரமேரூரில் பல்லவர் காலத்தைச் சார்ந்த வடவாயிற்செல்வி எனப்படும் பழமையான துர்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 24ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6ல் துவங்கியது.கோவில் வளாகத்தில் கொலு கண்காட்சி அமைக்கப்பட்டு, தினமும் காலையில், உற்சவர் துர்கை அம்மனுக்கு சிறப்பு அலங்கார

உத்திரமேரூர்:உத்திரமேரூர் துர்கை அம்மன் கோவிலில், உலக நன்மைக்காக, 208 திருவிளக்கு பூஜை நடந்தது.

உத்திரமேரூரில் பல்லவர் காலத்தைச் சார்ந்த வடவாயிற்செல்வி எனப்படும் பழமையான துர்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 24ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6ல் துவங்கியது.கோவில் வளாகத்தில் கொலு கண்காட்சி அமைக்கப்பட்டு, தினமும் காலையில், உற்சவர் துர்கை அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடந்து வருகிறது. மாலையில், அம்மனுக்கு தினமும் ஒரு அலங்காரம் என, பல்வேறு அலங்காரத்தில் துர்கை அம்மன் அருள்பாலித்தார்.

எட்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு, உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை பேறு கிடைக்க வேண்டி, துர்காஷ்டமி பூஜையுடன் 208 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X