சிற்பக்கூடங்களில் ஆயுத பூஜை வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிற்பக்கூடங்களில் ஆயுத பூஜை வழிபாடு

Added : அக் 15, 2021
Share
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்பக்கூடங்களில், ஆயுத பூஜை வழிபாடு கொண்டாடப்பட்டது.மாமல்லபுரம், பல்லவர் சிற்பக்கலை பகுதியாக விளங்குகிறது. சிற்பக்கூடங்கள் நிறைந்துள்ளன. பெரும்பான்மையாக, கற்சிற்பக் கூடங்களும், மர, சுதை, உலோக சிற்பக்கூடங்கள் குறைவாகவும் உள்ளன. கோவில் வழிபாட்டிற்கான, தெய்வ சிலைகள்; அலங்கார அழகிற்கான, நவீன சிலைகள் என வடிக்கப்படுகின்றன.கொரோனா வைரஸ் தொற்று

மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்பக்கூடங்களில், ஆயுத பூஜை வழிபாடு கொண்டாடப்பட்டது.

மாமல்லபுரம், பல்லவர் சிற்பக்கலை பகுதியாக விளங்குகிறது. சிற்பக்கூடங்கள் நிறைந்துள்ளன. பெரும்பான்மையாக, கற்சிற்பக் கூடங்களும், மர, சுதை, உலோக சிற்பக்கூடங்கள் குறைவாகவும் உள்ளன. கோவில் வழிபாட்டிற்கான, தெய்வ சிலைகள்; அலங்கார அழகிற்கான, நவீன சிலைகள் என வடிக்கப்படுகின்றன.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால் இரு ஆண்டுகளாக முடங்கிய இத்தொழில், தற்போது நடக்கிறது.

இக்கூடங்களில், ஆயுத பூஜை நாளான நேற்று, வழிபாடு நடத்தி கொண்டாடப்பட்டது. சிற்பக் கலைஞர்கள், கூடங்களை துாய்மைப்படுத்தி, வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி, வண்ணக் காகிதத்தால் அலங்கரித்தனர். சுவாமிக்கு, பொரி, அவல், பழங்கள் படைத்து, கருவிகள் வைத்து படைத்து, கல்லில் செதுக்கி கொண்டாடினர்.கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்களிலும் நேற்று முன்தினம் இவ்வழிபாடு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X