சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ் வழங்காததால் அதிருப்தி

Added : அக் 15, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஒன்றியம், உள்ளாட்சி பதவியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படவில்லை.செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்.,6, 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள், போட்டியின்றி தேர்வான, பெரியகாட்டுப்பாக்கம் ஊராட்சி தலைவர் தவிர்த்து, 53 ஊராட்சி தலைவர்கள்;

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஒன்றியம், உள்ளாட்சி பதவியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படவில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்.,6, 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள், போட்டியின்றி தேர்வான, பெரியகாட்டுப்பாக்கம் ஊராட்சி தலைவர் தவிர்த்து, 53 ஊராட்சி தலைவர்கள்; போட்டியின்றி தேர்வான பெரியகாட்டுப்பாக்கம் ஊராட்சி, ஆறு வார்டு உறுப்பினர்கள் தவிர்த்து, 402 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.அவரவர் பகுதி, ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், வெற்றி பெற்றவர் குறித்து அறிவித்த, தேர்தல் அலுவலர்கள், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர்களுக்கு வழங்கவில்லை.

லத்துார் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில், அன்றே சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், இங்கு மட்டும் வழங்கப்படாமல், வெற்றி பெற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர்.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைக்கு பின், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை வழங்குவதாக' தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X