'கோடிகொப்பா --- 3' காட்சிகள் ரத்துதியேட்டர்களில் ரசிகர்கள் கல்வீச்சு

Added : அக் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு:நடிகர் சுதீப் நடித்துள்ள, 'கோடிகொப்பா - 3' படம் நேற்று வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.நடிகர் சுதீப் நடித்த 'கோடிகொப்பா - 3' படம் கர்நாடக முழுவதும் வெளியாவதாக இருந்தது. இதனால் சுதீப் ரசிகர்கள், படம் வெளியாகும் தியேட்டரில் கட் அவுட் தோரணங்களை கட்டி ஆவலுடன் காத்திருந்தனர். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகமும் செய்யப்பட்டது. ரசிகர்களுக்காக

பெங்களூரு:நடிகர் சுதீப் நடித்துள்ள, 'கோடிகொப்பா - 3' படம் நேற்று வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

நடிகர் சுதீப் நடித்த 'கோடிகொப்பா - 3' படம் கர்நாடக முழுவதும் வெளியாவதாக இருந்தது. இதனால் சுதீப் ரசிகர்கள், படம் வெளியாகும் தியேட்டரில் கட் அவுட் தோரணங்களை கட்டி ஆவலுடன் காத்திருந்தனர். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகமும் செய்யப்பட்டது. ரசிகர்களுக்காக காலை 6:00 மணிக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 7:00 மணியானாலும் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கப்படாதால் ரசிகர்கள் தியேட்டர் முன் ரகளையில் ஈடுபட்டனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு, வினியோகஸ்தர்கள் பிரச்னையால் நேற்று படம் வெளியாகவில்லை. விஜயபுராவில் உள்ள 'ட்ரீம் லேண்ட்' தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கேட்டை உடைத்து, உள்ளே புகுந்து படத்தை திரையிடுமாறு கலாட்டாவில் ஈடுபட்டனர்.

அங்குள்ள உபகரணங்களை உடைத்து துவம்சம் செய்தனர். தியேட்டர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசார், ரசிகர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.ராம்நகர் ஸ்ரீராமா தியேட்டரிலும் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர். பெலகாவி சிக்கோடியில் ரசிகர்கள், மதியம் 3:00 மணிக்குள் படம் ரீலீஸ் ஆகாவிட்டால் தியேட்டர் முன் தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர். அவர்களை போலீசார் அழைத்து சென்றனர்.

பெங்களூரின் பல தியேட்டர்களிலும் படம் வெளியாகததால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்பட்டது. இன்று படம் வெளியாகும் என தயாரிப்பாளர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

கோடிகொப்பா தயாரிப்பாளர் சூரப்பா பாபு கூறுகையில், ''சில வினியோகஸ்தர்களின் சூழ்ச்சியால் படத்தை வெளியிட முடியவில்லை. இதற்கு பல காரணம் உள்ளது. வெள்ளிக்கிழமை படம் கண்டிப்பாக வெளியாகும். என் தவறு எதுவும் இல்லை. என்னை மன்னியுங்கள்,'' என்றார்.

நடிகர் சுதீப் கூறுகையில், ''படத்துக்கு யாரால் தொந்தரவு ஏற்பட்டது என்பது நன்றாக தெரியும். சூரப்பா பாபு கவலைப்பட வேண்டாம். காலம்தான் பதில் சொல்லும். படம் நாளை கண்டிப்பாக வெளியாகும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். ரசிகர்கள் தயவு செய்து கலாட்டாவில் ஈடுபட வேண்டாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X