பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் வடிகால் துாய்மை பணியில் 'சுணக்கம்'

Added : அக் 15, 2021
Share
Advertisement
ஊட்டி:'நீலகிரியில், வடிகால் துாய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது,' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.'நீலகிரியில், பருவ மழையின் போது ஏற்படும் பேரிடரை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், ஒரு வாரம் காலம், மழை நீர் வடிகால் அமைப்புகளை துாய்மைப்படுத்த வேண்டும்,' என, மாநில அரசு உத்தரவிட்டது.அதன்படி, சமீபத்தில் ஊட்டி காந்தளில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர்

ஊட்டி:'நீலகிரியில், வடிகால் துாய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது,' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.'நீலகிரியில், பருவ மழையின் போது ஏற்படும் பேரிடரை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், ஒரு வாரம் காலம், மழை நீர் வடிகால் அமைப்புகளை துாய்மைப்படுத்த வேண்டும்,' என, மாநில அரசு உத்தரவிட்டது.அதன்படி, சமீபத்தில் ஊட்டி காந்தளில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் இதற்கான பணியை துவக்கி வைத்தனர். அப்போது அமைச்சர் பேசுகையில், 'அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், மேலதிகாரிகளின் உத்தரவுப்படி பணியாளர்கள் மூலம் வாடிகால்களை துாய்மை செய்து, அதற்கான அறிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும்,' என்றார்.இந்நிலையில், நீலகிரியில் உள்ள, 283 பேரிடர் பகுதிகளில் உள்ள, மழை செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ள, பல சிறு பாலங்கள் அடைப்பட்டதால், தற்போது பெய்து வரும் கன மழையின் போது, குன்னுார்; ஊட்டி பகுதிகளில், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவரை, இதனை சீரமைக்க, உள்ளாட்சி அமைப்புகள் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை என்பது, இதன் மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது.மக்கள் கூறுகையில்,' வரும் வாரங்களில், மழை தீவிரம் அடைவதற்குள், மாவட்ட நிர்வாகம், பேரிடர் பாதிப்பு பகுதிகளில் மேற்கொண்ட வடிகால் துாய்மை பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில்,' சமீபத்தில் மழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகள் சீரமைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X