மகளிர் குழுவினர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 15, 2021
Share
Advertisement
கூடலுார்,;கூடலுார் மண்வயல் பகுதியில் 'நபார்ட்' வங்கி உதவியுடன், சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட, 600க்கு மேற்பட்டவர்கள், இணைந்து, சுய தொழில் கூட்டமை நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இதன் வரவு செலவுகள், மகளிர் தொண்டு நிறுவன குழு நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'நிறுவனத்துக்காக, உறுப்பினர்களிடம் பெறப்பட்ட வைப்பு தொகையில் முறைகேடு

கூடலுார்,;கூடலுார் மண்வயல் பகுதியில் 'நபார்ட்' வங்கி உதவியுடன், சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட, 600க்கு மேற்பட்டவர்கள், இணைந்து, சுய தொழில் கூட்டமை நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இதன் வரவு செலவுகள், மகளிர் தொண்டு நிறுவன குழு நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'நிறுவனத்துக்காக, உறுப்பினர்களிடம் பெறப்பட்ட வைப்பு தொகையில் முறைகேடு நடந்துள்ளது,' என, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்திருந்தார்.இதை தொடர்ந்து, 'பெண் நிர்வாகி மீது உண்மைக்கு புறம்பாக புகார் கூறிய நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்து, நிறுவனத்தை சேர்ந்த சுய உதவி குழு பெண்கள் மண்வயல் சந்திப்பில், நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கபட்டது.கூடலுார் இன்ஸ்பெக்டர் அருள் அப்பகுதிக்கு வந்து, 'புகார் தொடர்பாக, விசாரணை செய்யப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று, மகளிர் குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X