தேவையை விட கூடுதலாக மின்சாரம் உற்பத்தி| Dinamalar

தேவையை விட கூடுதலாக மின்சாரம் உற்பத்தி

Added : அக் 15, 2021
Share
பெங்களூரு:"மாநிலத்துக்கு தேவையான மின்சாரத்தை விட, கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகிறது. மின்சாரம் பற்றாக்குறை இல்லை. மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை," என மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார். மின்சார துறை அமைச்சர் சுனில்குமார், நேற்று, '1912' அவசர அழைப்பு சகாயவாணி அலுவலகத்துக்கு திடீரென வந்து ஆய்வு செய்தார்.ஆயுத பூஜை நாளான நேற்று, அமைச்சர்

பெங்களூரு:"மாநிலத்துக்கு தேவையான மின்சாரத்தை விட, கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகிறது. மின்சாரம் பற்றாக்குறை இல்லை. மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை," என மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.

மின்சார துறை அமைச்சர் சுனில்குமார், நேற்று, '1912' அவசர அழைப்பு சகாயவாணி அலுவலகத்துக்கு திடீரென வந்து ஆய்வு செய்தார்.ஆயுத பூஜை நாளான நேற்று, அமைச்சர் சுனில்குமார், பெங்களூரிலுள்ள 1912 சகாயவாணி அலுவலகத்துக்கு திடீர் வருகை தந்தார். அமைச்சரை பார்த்த ஊழியர்கள், அதிர்ச்சியில் தடுமாறினர்.

சகாயவாணி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்ட போது அமைச்சரே பேசி பிரச்னைகளை கேட்டறிந்தார். அதை தீர்த்து வைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தினமும் சகாய வாணிக்கு எத்தனை அழைப்பு வருகின்றன; எப்படி தீர்வு காணப்படுகிறது என்ற தகவல்களை கேட்டறிந்தார். புகார்களை விரைந்து கவனிக்கும்படி அமைச்சர் அறிவுறுத்தினார்.

பின், அவர் நேற்று கூறியதாவது:நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்திக்கு எந்த இடையூறும் இல்லை. தற்போது கோல் இந்தியா லிமிடெட், எஸ்.சி.சி.எல்.,நிறுவனங்கள், தினமும் 12 முதல் 13 ரேக் நிலக்கரி வினியோக்கின்றன. எனவே தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உற்பத்தியாகிறது.

ராய்ச்சூர், பல்லாரி, எரமரஸ் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன. ராய்ச்சூரில் எட்டு யூனிட்டுகள் உள்ளன. இவற்றில் 1,720 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. பல்லாரியின் மூன்று யூனிட்டுகளில், 1,700 மெகாவாட், எரமரசின் 2 யூனிட்டுகளில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
மொத்தம் 13 யூனிட்டுகளும், 5020 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. இவற்றில் எட்டு யூனிட்டுகள் செயல்படுகின்றன. மின்சார தேவை குறைந்ததால், ஐந்து யூனிட்டுகள் நிறுத்தப் பட்டுள்ளது. கர்நாடகாவில், மின்சாரம் பற்றாக்குறை ஏற்படாமல், பார்த்துகொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X