பொது செய்தி

தமிழ்நாடு

மண்ணில் புதைந்த நாய்குட்டிகள்: அபய குரல் எழுப்பி அழைத்த தாய்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாலக்காடு : 'தன் குட்டிகள் மண்ணில் புதைந்து விட்டன' என, இடைவிடாமல் அபய குரல் எழுப்பி அப்பகுதியில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்த தாய் நாயின் பாசப்போராட்டத்தை பார்த்து பொது மக்கள் கண் கலங்கினர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா அருகே உள்ள கப்பூர் காஞ்சிரதாணியில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இங்கு அஷ்ரப் என்பவரின் வீட்டின் அருகே மேடான பகுதியில்
கன மழை, மண் சரிவு, நாய்குட்டிகள், தாய் நாய்

பாலக்காடு : 'தன் குட்டிகள் மண்ணில் புதைந்து விட்டன' என, இடைவிடாமல் அபய குரல் எழுப்பி அப்பகுதியில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்த தாய் நாயின் பாசப்போராட்டத்தை பார்த்து பொது மக்கள் கண் கலங்கினர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா அருகே உள்ள கப்பூர் காஞ்சிரதாணியில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இங்கு அஷ்ரப் என்பவரின் வீட்டின் அருகே மேடான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.இச்சம்பவத்தில், மண் மேட்டில் அமர்ந்திருந்த வீதியில் சுற்றித்திரியும் நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்தன. இதை யாரும் கவனிக்கவில்லை.


latest tamil newsஇதில், தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்த நிலையில், தலைப்பகுதி மட்டும் வெளியில் நீட்டிகொண்டிருந்தது. தன்னுடன் பாசத்துடன் அமர்ந்திருந்த தன் குட்டிகள் காணாததை கண்ட நாய், பாசப்போராட்டத்துடன் இடைவிடாமல் 'அபய குரல்' எழுப்பி மக்களை அழைத்தது. தாய் நாயின் இடைவிடாத சப்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த மக்கள் மண்ணில் புதைந்து தவித்த நாயை காப்பாற்றினர். அதன் பின் தான் தெரிந்தது. அந்த நாயுடன் ஆறு குட்டி நாய்கள் மண்ணில் புதைந்திருப்பது.


latest tamil news
அந்த தாய் நாய் இடைவிடாமல் அபயகுரல் எழுப்பியது. தன் குட்டிகளை காப்பாற்றுவதற்காக என தெரிந்து கண்கலங்கினர். ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டதிற்குப்பின் மண் சரிவை அப்புறப்படுத்தி இரண்டு குட்டி நாய்களை உயிருடன் மீட்டனர். நான்கு நாய் குட்டிகள் மண்ணில் புதைந்து பலியானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
18-அக்-202115:08:38 IST Report Abuse
mohan அன்பே சிவம்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-அக்-202100:45:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதை,அல்லது இதை ஈன்றதை வளர்க்க துப்பில்லாமல் தெருவில் அலைய விட்ட அந்த இரண்டு கால் நாயை என்ன செய்யலாம்? நாய் வளர்ப்பு ஒரு பெரிய வியாபாரம்.. அதை கட்டுப்படுத்துங்கள்.. அதை மேலும் வார்க்கப்பார்க்கும் கார்ப்பரேட் கூட்டம்.. செல்லப்பிராணிகள் வளர்ப்பு அவ்வளவு சுலபம் அல்ல. அதன் முழு வீச்சை அறியாமல் குட்டிகளை வாங்கி அவை வளர்ந்ததும் பராமரிக்க துப்பில்லாமல் தெரு நாய்களாக்கும் இரண்டு கால் நாய்களால் வரும் அவலம் இது.. புரட்டாசியலிலேயே ஆறு குட்டிகள், அத்தனையும் தெருநாயாக அலையும்.. மார்கழி மாசத்து நாய் என்ன செய்யுமோ..மாநகராட்சி செலவில் தெருநாய்களுக்கு பல பட்டி வைத்து, தகுதியுள்ள தத்தெடுப்பவர்களுக்கு பிரமாணபத்திரத்தில் கையெழுத்து வாங்கி வேண்டிய நாய்களை தத்தெடுத்து வளர்க்க அனுமதிக்கலாம். மற்றவைகளை அவைகளுக்கு "PUT TO SLEEP" முறையில் இந்த ஆதரவற்ற கொடிய ஈன வாழ்வில் இருந்து அமைதியாக விடுதலை அளிக்கலாம்.
Rate this:
Cancel
15-அக்-202119:38:41 IST Report Abuse
Ram Pollachi யாருக்கு எப்படி உயிர் போகும் என்பது தெரியாது.... ரோட்டில் தினமும் அடிபட்டு ரோஸ்ட் ஆகும் நாய், பூனைகளின் எண்ணிக்கை மிக அதிகம் பார்த்து பார்த்து மனது கல்லாகிவிட்டது. அடுத்த பிறவியே வேண்டாம் இதே போதும் சாமீ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X