ரோட்டில் சுற்றி திரிவது நோய் பரப்ப அல்ல: ஐகோர்ட் கருத்து| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் சுற்றி திரிவது நோய் பரப்ப அல்ல: ஐகோர்ட் கருத்து

Added : அக் 15, 2021
Share
மதுரை:'தொற்றுநோய் காலத்தில் ரோட்டில் சுற்றித் திரிவது நோயைப் பரப்பும் என்ற போலீசாரின் வாதம் அடிப்படையற்றது' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த வின்சென்ட் பாலாஜி தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கின் போது ஏப்., 28ல் தடையை மீறி, 'டூ - வீலரில்' சுற்றித் திரிந்ததாக, உசிலம்பட்டி டவுன் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்தனர். அரசின்

மதுரை:'தொற்றுநோய் காலத்தில் ரோட்டில் சுற்றித் திரிவது நோயைப் பரப்பும் என்ற போலீசாரின் வாதம் அடிப்படையற்றது' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த வின்சென்ட் பாலாஜி தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கின் போது ஏப்., 28ல் தடையை மீறி, 'டூ - வீலரில்' சுற்றித் திரிந்ததாக, உசிலம்பட்டி டவுன் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்தனர். அரசின் உத்தரவிற்கு கீழ்ப்படியவில்லை என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்ய, போலீசாருக்கு அதிகாரம் இல்லை.வழக்குப் பதிய, சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என, இந்நீதிமன்றம் ஒரு வழக்கில் விரிவான வழிகாட்டுதல் பிறப்பித்துள்ளது. அந்நடைமுறை பின்பற்றவில்லை. தொற்று நோயை பிறருக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வெறுமனே சுற்றித் திரிந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.இளங்கோவன் உத்தரவு:மனுதாரர், தொற்று நோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டார் என வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர் வெறுமனே ரோட்டில் சுற்றித் திரிந்துள்ளார். கடுமையான குற்றத்தில் ஈடுபடவில்லை.சம்பவத்தின்போது 144 தடை உத்தரவு அமலில் இருந்திருந்தாலும், வீட்டிற்குள் செல்லுமாறு மனுதாரரை போலீசார் எச்சரித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக வழக்கு தொடர்ந்துள்ளனர். தொற்றுநோய் காலத்தில் ரோட்டில் சுற்றித் திரிவது நோயைப் பரப்பும் என்ற போலீசாரின் வாதம் அடிப்படையற்றது.திட்டமிடப்படாத சாதாரண செயல், மனுதாரரின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது. தொற்றுநோய் காலத்தில், மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு கைவிடப் போவதாக இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X