பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் கமிஷனருக்கு நெஞ்சுவலி; தனியார் மருத்துவமனையில் அனுமதி

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : பணியின் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.தமிழக காவல் துறையில், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான சங்கர் ஜிவால், 56, தற்போது டி.ஜி.பி., ரேங்கில், சென்னை போலீஸ் கமிஷனராக உள்ளார். அவர் நேற்று மாலை, கமிஷனர் அலுவலக எட்டாவது மாடியில் உள்ள தன் அலுவலகத்தில், பணிகளை கவனித்து வந்தார்.
Chennai Top Cop, Hospitalized, Chest Pain

சென்னை : பணியின் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக காவல் துறையில், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான சங்கர் ஜிவால், 56, தற்போது டி.ஜி.பி., ரேங்கில், சென்னை போலீஸ் கமிஷனராக உள்ளார். அவர் நேற்று மாலை, கமிஷனர் அலுவலக எட்டாவது மாடியில் உள்ள தன் அலுவலகத்தில், பணிகளை கவனித்து வந்தார். அப்போது, மாலை 3:35 மணியளவில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அழைப்பு மணியை அடித்துள்ளார். அவரது அறையின் நுழைவு வாயிலில் இருந்த போலீஸ்காரர் சென்று பார்த்த போது, நெஞ்சுவலி தாங்க முடியாமல் கமிஷனர் துடித்துள்ளார்.

தகவல் தெரிந்து மற்ற அதிகாரிகளும் அங்கு வந்தனர். கமிஷனரை கைதாங்களாக துாங்கி, 'லிப்ட்' வாயிலாக தரை தளத்திற்கு கொண்டு சென்றனர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின், ஆம்புலன்ஸ் வாகனத்தில் சங்கர் ஜிவால், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news


சங்கர் ஜிவால், ரவுடிகள் ஒழிப்பு, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, குற்றங்கள் குறைப்பு என சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். பணிச்சூழல் காரணமாக, சில நாட்களில் அலுவலகத்திலேயே தங்கி விடுவதும் உண்டு. கூடுதல் கமிஷனர்கள் மற்றும் இணை கமிஷனர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி, உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். காவலர் நலன் காப்பதிலும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்.

சமீபத்தில், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இதில், 14 மணி நேரத்திற்கு மேல், போலீசாரிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.காவல் நிலையங்களுக்கு சென்று திடீரென ஆய்வு செய்தல், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரிடம், அவர்களின் வீடுகளுக்கே சென்று நலம் விசாரித்தல், காவலர்களுக்கு மன நல பயிற்சி வகுப்பு துவங்குவது என சுழன்று பணியாற்றி வந்தார்.

பணிச்சுமை காரணமாக அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என போலீசார் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202117:29:56 IST Report Abuse
ராஜா தேர்தலில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்த்தோம். அப்பப்பா என்ன ஒரு எஜமான விசுவாசம். திமுக ஆட்சி முடியும் போது காவல்துறை மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் மரியாதை திமுக கட்சியினரின் கால் பாதனிகளுக்கு கீழ் போயிருக்கும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
15-அக்-202112:21:04 IST Report Abuse
raja அந்த அளவுக்கு தேர்தல்ல உடன்பிறப்புகளின் அராஜகத்திற்கு ஆதரவு கொடுக்க சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்கு ஆளும் விடியல் அரசு ...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-அக்-202111:39:03 IST Report Abuse
Ramesh Sargam இப்படிப்பட்ட ஒரு நல்ல அதிகாரி நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X