போலீஸ் செய்திகள்//

Added : அக் 15, 2021
Share
Advertisement
லாட்டரி விற்ற ஐவர் கைதுசிவகாசி: தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சோலை காலனி சந்தோஷ் 20, கருப்பசாமி 44 ஆகியோரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல் அண்ணா காலனி விற்பனை செய்த வேல்சாமி 57, மணிகண்டன் 37, லிங்கம் 39 ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்தனர்.சரவெடி பறிமுதல் ஒருவர் கைதுசாத்துார்: சாத்துார் டவுன் எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து

லாட்டரி விற்ற ஐவர் கைதுசிவகாசி: தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சோலை காலனி சந்தோஷ் 20, கருப்பசாமி 44 ஆகியோரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல் அண்ணா காலனி விற்பனை செய்த வேல்சாமி 57, மணிகண்டன் 37, லிங்கம் 39 ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்தனர்.சரவெடி பறிமுதல் ஒருவர் கைதுசாத்துார்: சாத்துார் டவுன் எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். சின்னக்காமன்பட்டி பஸ் நிறுத்ததில் கையில் வெள்ளை சாக்குபையுடன் நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த சோலைராஜ், 27. பிடித்து சோதனை செய்த போது 5. கிலோ சரவெடியை உரிமம் பெறாமல் வைத்திருந்தது தெரிந்தது. பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.வேலை வாங்கி தருவதாக மோசடிசாத்துார்: சாத்தூர் சாமியார் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 53. இவர் ஓய்வு சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர். இவர் மகன் ரஞ்சித்குமாருக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார், திண்டுக்கல் அண்ணாநகர் யூனியன் ஆபீஸ் காலனி சீனி மகன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ரூ.20 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டனர். பணத்தை திரும்ப கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என சாத்துார் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் கருப்பசாமி மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்திரவிட்டதை தொடர்ந்து அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு விற்க முயன்றவர் கைதுசாத்துார்: ஏழாயிரம்பண்ணை எஸ்.ஐ., பாபு தலைமையிலான போலீசார் கள்ளவெடி தயாரிப்பை தடுக்க ரோந்து சென்றபோது அச்சங்குளத்தை சேர்ந்த கருப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த பீட்டர் 59. பேப்பர் பாம் 50, திரி வளையம் 5, திரிகட்டுகள் 12,பெரிய புஸ்வானம் 20 ஆகிய பட்டாசுகளை உரிமம் இன்றி விற்க வந்திருப்பது தெரிந்தது. அவரிடமிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளி மாணவி மாயம்சிவகாசி: சிறுகுளம் காலனி ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி சிவகாசியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். இந்நிலையில் வீட்டை விட்டுச் சென்றவர் திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.காஸ் கசிவில் பாதித்தவர் பலிராஜபாளையம்: காஸ் கசிவால் சிகிச்சை பெற்றுவந்த ராஜபாளையத்தை சேர்ந்த கொத்தனார் மாரியப்பன் 58, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜபாளையம் பெத்தையா பிள்ளை தெருவை சேர்ந்த மாரியப்பன், நாச்சியார் தம்பதியினர் அக். 8ல் வீட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட காஸ் சிலிண்டர் கசிவால் உடல் முழுவதும் 75 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு சிவகாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X