பகிர்மான குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்| Dinamalar

பகிர்மான குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்

Added : அக் 15, 2021
Share
சிவகங்கை-சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் அப்பகுதியில் செல்லும் கண்மாய் கால்வாயை துார் வாரிய போது குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர். இதன் காரணமாக ஓடையில் பாய்ந்து குடிநீர் வீணாகி வருகிறது.வாணியங்குடி ஊராட்சியில் ரோஸ்நகர், முல்லை நகர், மலர் நகர் ஆகிய பகுதிகளின் குடிநீர் விநியோகத்திற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது.

சிவகங்கை-சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் அப்பகுதியில் செல்லும் கண்மாய் கால்வாயை துார் வாரிய போது குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர். இதன் காரணமாக ஓடையில் பாய்ந்து குடிநீர் வீணாகி வருகிறது.வாணியங்குடி ஊராட்சியில் ரோஸ்நகர், முல்லை நகர், மலர் நகர் ஆகிய பகுதிகளின் குடிநீர் விநியோகத்திற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இதலிருந்து இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.முல்லை நகர்பகுதியில் கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களை துார் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்தது. அப்போது கால்வாய் பகுதியில் செல்லும் குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர்.உடைந்த குழாயை சீரமைக்காததால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் குடிநீர் கால்வாயில் சென்று வீணாகி வருகிறது. முல்லை நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தில் உடைந்துள்ள குழாயை சீரமைப்பு செய்துமுறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X