பொது செய்தி

தமிழ்நாடு

பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வாரியம் வலியுறுத்தல்

Added : அக் 15, 2021
Share
Advertisement
சென்னை : 'பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, பொருட்களை வாங்க வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழகமாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நம் பூமி அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாட்டால் மாசடைந்து பாதிக்கப்பட்டுள்ளது.கடல் வாழ் உயிரினங்கள் உட்பட நம் சுற்றுச்சூழல் அமைப்பில்

சென்னை : 'பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, பொருட்களை வாங்க வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழகமாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நம் பூமி அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாட்டால் மாசடைந்து பாதிக்கப்பட்டுள்ளது.கடல் வாழ் உயிரினங்கள் உட்பட நம் சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும், நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும், பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்தி வருகிறது.

இந்த மாசுபாட்டை தடுக்க, சென்னை மாநகராட்சியும், தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை, வனத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

தீங்கு விளைவிக்கும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் டீ கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கை பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

அதேபோல, உணவு கட்ட பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை பயன்படுத்துவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.எனவே, பண்டிகை காலத்தில் வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், புத்தாடைகள், காய்கறிகள், பழங்கள், இனிப்புகள், பூக்கள், பொறி மற்றும் பிற பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் விரும்புவர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை உபயோகப்படுத்தி பொருட்களை வாங்க வேண்டும்.நம் நாடு மற்றும் நாம் வாழும் இந்த பூமி எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலை அகற்ற, மக்களின் பேராதரவையும், பங்களிப்பையும் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X