பொது செய்தி

தமிழ்நாடு

மஸ்ட் சிறப்பு கட்டுரை

Added : அக் 15, 2021
Share
Advertisement
காரைக்குடி-நாகரிக உலகில் தனது கனவு இல்லத்தை அழகுபடுத்த மார்பிள், டைல்ஸ் என எத்தனையோ கற்கள் வந்தாலும் அன்று முதல் இன்று வரை ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு.கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற செட்டிநாட்டு வீடுகளின், அழகினை மேலும் ஒரு படி மெருகூட்டுவதில் ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள் முக்கிய பங்காற்றுகிறது என்பதில் ஐயமில்லை.கலை நயத்துடன்

காரைக்குடி-நாகரிக உலகில் தனது கனவு இல்லத்தை அழகுபடுத்த மார்பிள், டைல்ஸ் என எத்தனையோ கற்கள் வந்தாலும் அன்று முதல் இன்று வரை ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு.கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற செட்டிநாட்டு வீடுகளின், அழகினை மேலும் ஒரு படி மெருகூட்டுவதில் ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள் முக்கிய பங்காற்றுகிறது என்பதில் ஐயமில்லை.கலை நயத்துடன் இயந்திரங்கள் ஏதுமின்றி, மனித உழைப்பை மட்டுமே நம்பி ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள் செய்யப்படுகிறது. ஆத்தங்குடியில் தயாராகும் டைல்ஸ் தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆத்தங்குடியில் கிடைக்கும் வாரி மணல், சிமென்ட், நிறத்துக்காக ஆக்சைடுகள் கலந்து செய்யப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வீட்டிற்கு தனி அழகையும் தருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்களில் செய்யப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள், வெயில் காலங்களில் குளிர்ச்சியையும் , குளிர் காலங்களில் வெது வெதுப்பையும் தரவல்லது.சதுர கண்ணாடி மீது, எந்த டிசைன் வேண்டுமோ அந்த டிசைன் வடிவ அச்சினை வைப்பார்கள். இந்த அச்சில் டிசைனுக்கு ஏற்ப வண்ண வண்ண கலவையை ஊற்றுவர். அதன் மீது சிமென்ட் கலவை, மணல் கொண்டு பூசுவர். பின்பு டிசைன் நன்றாக பிடிப்பதற்காக அழுத்தம் கொடுத்து அடுக்கி வைப்பார்கள்.காய்ந்த பிறகு தண்ணீர் தொட்டியில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு ஊற வைப்பார்கள். பின்பு, டைல்ஸில் உள்ள கண்ணாடி அகற்றப்பட்டவுடன், டைல்ஸ் கற்கள் பளபளப்பாக தரையில் பதிக்க தயாராகி விடும். நகரத்தார்கள் மட்டுமே விரும்பக் கூடியதாக இருந்த ஆத்தங்குடி பூக்கற்கள் இன்று ஆர்கிடெக்ட் அனைவரும் விரும்பும் அபிமான கற்களாக மாறி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி அமெரிக்கா ,கனடா உள்ளிட்ட நாடுகளிலும் பாரம்பரியத்தை நிலைநாட்டி வருகிறது ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள்.ஆத்தங்குடி நாச்சியப்பன் கூறுகையில்; ஆத்தங்குடி டைல்ஸ்க்கு எப்போதும் தனிப் பெயர் உண்டு. நகரத்தார் மட்டுமே விரும்பி வாங்கும் டைல்ஸ் கற்களை இன்று அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.அக்கால கட்டட கலைஞர்கள் மட்டுமின்றி இக்கால ஆர்க்கிடெக்குகளும் ஆத்தங்குடி டைல்ஸ்களை பரிந்துரை செய்கின்றனர். அதற்கு காரணம், பிற கற்கள் பதித்த வீடுகளில் வசிப்போர்களுக்கு 40 வயதிலேயே மூட்டுவலி வந்துவிடுகிறது. மேலும் இது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. பலரும் பரம்பரைத் தொழிலாக செய்து வருகின்றனர்.இங்கு தயாராகும் டைல்ஸ் கற்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற கற்களைப்போல், இல்லாமல் நாட்களாக செல்ல செல்லத்தான் ஆத்தங்குடி கற்களுக்கு பாலிஸ் கூடும்.ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் பாரம்பரிய பூக்கற்களுக்கு புவிசார் குறியீடு வேண்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். புவிசார் குறியீடு கிடைத்தால் மட்டுமே எங்களது வாழ்வாதாரம் மேம்படும். எனவே புவிசார் குறியீடு வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X