பொது செய்தி

தமிழ்நாடு

கீழப்பூங்குடி மீனாட்சியம்மன் கோயில்தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்

Added : அக் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை-சிவகங்கை அருகே கீழப்பூங்குடி மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பக்குளம் முட்புதர் மண்டி, சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழப்பூங்குடி மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. கோயில் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார தலமாக இக்கோயில் உள்ளது. வெளி மாவட்டங்களில்

சிவகங்கை-சிவகங்கை அருகே கீழப்பூங்குடி மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பக்குளம் முட்புதர் மண்டி, சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழப்பூங்குடி மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. கோயில் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார தலமாக இக்கோயில் உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.கோயில் தெப்பக்குளம் பயன்படுத்த முடியாத நிலையில், முட்புதர் மண்டி, படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. இதன் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்படாததால், மழை நீர் வரத்து குறைந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. கோயில் தெப்பக்குளம் பகுதி சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது.முறையான பராமரிப்பு செய்யப்படாததால் முட்புதர்களில் விஷஜந்துக்கள் வாழ்விடமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முட்புதர்களை அகற்றி படிக்கட்டுகளை பராமரிப்பு செய்து தெப்பக்குளத்தை பாதுகாக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X