உள்ளாட்சி தேர்தல் தேவையற்ற விமர்சனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தேவையற்ற விமர்சனம்

Added : அக் 15, 2021
Share
திருப்புத்தூர்-உள்ளாட்சி தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த அ.தி.மு.க., தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது விமர்சனம் வைக்கின்றனர், என திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டன. இதை உணர்ந்து தான் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,விற்கு ஓட்டளித்துள்ளனர். அ.தி.மு.க,., தனது தோல்வியை

திருப்புத்தூர்-உள்ளாட்சி தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த அ.தி.மு.க., தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது விமர்சனம் வைக்கின்றனர், என திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டன. இதை உணர்ந்து தான் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,விற்கு ஓட்டளித்துள்ளனர். அ.தி.மு.க,., தனது தோல்வியை மறைப்பதற்காக தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுகின்றனர்.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மனச்சாட்சி இருந்திருந்தால் தேர்தல் நேர்மையாக நடந்தது. மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று சொல்லியிருப்பார்கள். அவர்களிடம் இரட்டை தலைமை, மாறுபட்ட கருத்து, கூட்டணி கட்சிகள் குறைவு போன்ற காரணத்தால் வெற்றி பெற முடியவில்லை. இதை அவர்கள் தெரிந்தும் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஜெ., மறைவில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க மறுக்கின்றனர் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X