சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5.50 கோடி இழப்பு; சங்க செயலர் மீது வழக்கு

Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருச்சி : திருச்சி கூட்டுறவு கட்டுமான நாணய சங்க செயலராக 2016 - 17ல், பணியாற்றியவர் கார்மேகம், 53. அப்போது,சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு, அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் பகுதியில் இருந்த நிலத்தில், 3,000 சதுர அடியை, அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாக விற்றுள்ளார்.இதனால், அரசுக்கு, 5.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்த புகாரில், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார்,

திருச்சி : திருச்சி கூட்டுறவு கட்டுமான நாணய சங்க செயலராக 2016 - 17ல், பணியாற்றியவர் கார்மேகம், 53. அப்போது,சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு, அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் பகுதியில் இருந்த நிலத்தில், 3,000 சதுர அடியை, அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாக விற்றுள்ளார்.

இதனால், அரசுக்கு, 5.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்த புகாரில், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில், செல்வநகரில் உள்ள கார்மேகம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, 2.70 லட்சம் ரூபாய், 45 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஆகியவை இருந்தன.

இவற்றை, வழக்கின் ஆவணங்களாக பதிவு செய்தனர். இந்நிலையில், கார்மேகம் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்மேகம், தற்போது, திருச்சி கருமண்டபம் மத்திய கூட்டுறவு வங்கியில் செயலராக உள்ளார். இதே வழக்கில், சங்கத்தின் தலைவராக இருந்த மோகன் என்பவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N VADIVEL - namakkal,இந்தியா
15-அக்-202111:49:03 IST Report Abuse
N VADIVEL கூட்டுறவு சங்கம் என்பது கூட்டாக எவருக்கும் சந்தேகம் இல்லாத வகையில் கொள்ளை அடிப்பது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X