பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை சிறப்பு செய்தி

Added : அக் 15, 2021
Share
Advertisement
சுற்றுலா என்றால் குதுாகலம் கட்டாயம் இருக்க வேண்டும், அதே சுற்றுலா பல பரிமாணங்களை தந்தால் எப்படி இருக்கும். பொதுவாக சுற்றுலா என்றதும் குட்டீஸ்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போவோம் என சொல்வார்கள். ஆனால் நமக்கு அருகில் இருக்கும் ராமேஸ்வரம் என்றால் பல மடங்கு மகிழ்ச்சியை தரும்.ஆன்மிகம், இயற்கை, அழகு, அதிசயங்கள் அனைத்தும் தாங்கி நிற்கும் நடுத்தரவாசிகளின் ஹைகிளாஸ்

சுற்றுலா என்றால் குதுாகலம் கட்டாயம் இருக்க வேண்டும், அதே சுற்றுலா பல பரிமாணங்களை தந்தால் எப்படி இருக்கும். பொதுவாக சுற்றுலா என்றதும் குட்டீஸ்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போவோம் என சொல்வார்கள். ஆனால் நமக்கு அருகில் இருக்கும் ராமேஸ்வரம் என்றால் பல மடங்கு மகிழ்ச்சியை தரும்.ஆன்மிகம், இயற்கை, அழகு, அதிசயங்கள் அனைத்தும் தாங்கி நிற்கும் நடுத்தரவாசிகளின் ஹைகிளாஸ் சுற்றுலா தலம், கடலோரத்தில் கணக்கிடாத பல சிறப்பிடத்தை கொண்டது ராமேஸ்வரம் . 170 கி.மீ., துாரமுள்ள மதுரை, ராமேஸ்வரம் இடையே மதுரையில் இருந்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை அரசு பஸ் இயங்குகிறது. திருச்சி, ராமேஸ்வரம் இடையே 230 கி.மீ., துாரத்திற்கு ராமேஸ்வரத்தில் இருந்து 45 நிமிடத்திற்கு ஒருமுறை அரசு பஸ் இயங்குகிறது.மதுரை, திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினசரி பயணிகள் ரயில்கள் உண்டு. வரும் வழியில் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலம், பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் , கடல் அழகு, மன்னார் வளைகுடா தீவுகளை கண்டுகளிக்கலாம். தீர்த்த சிவதலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.ராமேஸ்வரத்தில் இருந்து 15 கி.மீ., துாரத்தில் பாம்பன் குந்துகாலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. சிகாகோ பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய விவேகானந்தர் முதன் முதலாக தடம் பதித்த பகுதி இது. இந்த மண்டபத்தில் அதற்கான ஆதாரங்களுடன் விளக்கும் படம், ஒவியங்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் அறக்கட்டளை சார்பில் சிமென்ட் கலவையில் 20 அடி நீள சுறா மீன் உள்ளிட்ட கடல்சார் உயிரின காட்சியகம், சறுக்கு விளையாட்டுகள் குழந்தைகளை கவரும். இதுதவிர நினைவு மண்டபம் பின்புறத்தில் அழகிய கடற்கரை, குருசடை தீவு, சிங்கிள் தீவுகளை கண்டு ரசிக்கலாம். ராமேஸ்வரம் டூ குந்துகாலுக்கு தினமும் இரு அரசு டவுன் பஸ்கள் செல்கிறது. ஆட்டோவில் செல்ல ரூ.400 கட்டணம்.ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ஒரு கி.மீ.,துாரத்தில் ராமர் தீர்த்தம், சீதா தீர்த்தம் மற்றும் 3 கி.மீ.,துாரத்தில் தனுஷ்கோடியில் இலங்கைக்கு வானர சேனைகள் பாலம் அமைத்த போது, கொந்த மாதன பர்வதத்தில் ராமர் நின்று பார்த்த இடத்தில் ராமர் பாதம் கோயில்'உள்ளது. இங்கு செல்ல ஆட்டோவுக்கு ரூ.200 கட்டணம். 12 கி.மீ., துாரத்தில் ராவணன் தம்பி விபீஷணருக்கு ராமர் பட்டாபிேஷகம் சூட்டிய இடத்தில் கோதண்டராமர் கோயில், தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. மேலும் தனுஷ்கோடியில் 1964ல் புயலில் இடிந்த கட்டடங்கள், அரிச் சல்முனை கடல் அழகை காண ஆட்டோவில் பேக்கேஜ் கட்டணம் ரூ.800 முதல் 1000 வரை. இங்கு 30 நிமிடத்திற்கு ஒருமுறை அரசு டவுன் பஸ் செல்கிறது கட்டணம் ரூ.30.அக்னி தீர்த்த கடலில் இருந்து கடலில் படகு சவாரி செல்ல ஒருநபருக்கு ரூ.70 கட்டணம். சுமார் 45 நிமிடம் தொடர் சவாரியும், கடல் அழகை பாதுகாப்புடன் கண்டு ரசிக்கலாம். கடலோர கவிதை பாட பாம்பன் பாலம் அருகில் மண்டபம் பீச் சென்று அங்கிருந்து படகு சவாரி மூலம் பாம்பன் பாலம், பவளபாறைகளை கண்டு குதுாகலிக்கலாம். ஒரு நபருக்கு படகு கட்டணம் ரூ.50.ஆன்மிக தரிசனம், கடல் சார்ந்த அழகை ரிசிக்க லோ பட்ஜெட்டில் ராமேஸ்வரமே சரியான தேர்வு. இன்னும் என்ன தயக்கம் சீக்கிரம் கிளம்புங்க ஜாலியாக டூர் கிளம்புங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X