100 ரூபாயை கடந்தது டீசல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 ரூபாயை கடந்தது டீசல்

Added : அக் 15, 2021
Share
கடலுார் : தமிழகத்திலேயே முதல் முறையாக, கடலுார் மாவட்டம், குமராட்சியில் டீசல் லிட்டர் 100 ரூபாயை தாண்டி, விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் பெட்ரோல் நேற்று 31 காசுகள் அதிகரித்து, லிட்டர் 102.10; டீசல் லிட்டர் 97.93 ரூபாய்க்கு விற்றது.சென்னையில் இருந்து 190 கி.மீ.,யில் உள்ள கடலுாரில், பெட்ரோல் லிட்டர் 104.16; டீசல் 99.95 ரூபாய்க்கு விற்றது.கடலுார் மாவட்டம்,குமராட்சியில் தமிழகத்திலேயே
 100 ரூபாயை கடந்தது டீசல்

கடலுார் : தமிழகத்திலேயே முதல் முறையாக, கடலுார் மாவட்டம், குமராட்சியில் டீசல் லிட்டர் 100 ரூபாயை தாண்டி, விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் பெட்ரோல் நேற்று 31 காசுகள் அதிகரித்து, லிட்டர் 102.10; டீசல் லிட்டர் 97.93 ரூபாய்க்கு விற்றது.சென்னையில் இருந்து 190 கி.மீ.,யில் உள்ள கடலுாரில், பெட்ரோல் லிட்டர் 104.16; டீசல் 99.95 ரூபாய்க்கு விற்றது.கடலுார் மாவட்டம்,குமராட்சியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக டீசல் லிட்டருக்கு 100.29; காட்டுமன்னார்கோவிலில் 100 ரூபாய்க்கும் விற்றது.

தமிழக பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், ''மத்திய அரசும், மாநிலங்களும் ஒன்றிணைந்து வரியை குறைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X