திராட்சை விலை சரிவு விவசாயிகள் கவலை

Added : அக் 15, 2021
Share
Advertisement
கம்பம்---தொடர் மழை பெய்தும் பாதிக்காத நிலையில் திராட்சை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும். சில வாரமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் அதிர்ஷ்டவசமாக திராட்சையை சாம்பல் நோய் தாக்கவில்லை. பழம் உடைப்பும் ஏற்பவில்லை. சில இடங்களில் மட்டுமே நோய் பாதிப்பு உள்ளது. விவசாயிகள் முன்கூட்டியே

கம்பம்---தொடர் மழை பெய்தும் பாதிக்காத நிலையில் திராட்சை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும். சில வாரமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் அதிர்ஷ்டவசமாக திராட்சையை சாம்பல் நோய் தாக்கவில்லை. பழம் உடைப்பும் ஏற்பவில்லை. சில இடங்களில் மட்டுமே நோய் பாதிப்பு உள்ளது. விவசாயிகள் முன்கூட்டியே பூச்சிமருந்து தெளித்ததால், சாம்பல் நோய் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.விலையை பொறுத்தவரை கடந்த மாதம் கிலோவிற்கு ரூ.80 வரை கிடைத்த நிலையில் தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டும் கிடைக்கிறது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதால் நுகர்வோர் குறைவாக வாங்குவதே விலை குறைவுக்கு காரணமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை இனி பெய்யும் என்பதால்திராட்சையில் பாதிப்பு ஏற்படும் என சுருளிப்பட்டி திராட்சை விவசாய சங்க நிர்வாகி முகுந்தன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X