பொது செய்தி

தமிழ்நாடு

போடியிலிருந்து இலங்கை செல்லும் உப்புக்கடலை

Added : அக் 15, 2021
Share
Advertisement
போடி- -போடியில் குடிசை தொழிலில் தயாராகும் சுவையான உப்புக்கடலை இலங்கைக்கு ஏற்றுமதியாகிறது. போடி கருப்பசாமி கோயில் ரோட்டில் வாசுதேவன் பல ஆண்டுகளாக குடிசைத் தொழிலாக உப்புக்கடலை,நிலக்கடலை, பட்டாணி விற்பனை செய்கிறார். இவற்றிற்கு வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பு இருக்கும். உரிமையாளர் எஸ்.வாசுதேவன் கூறுகையில்: கொண்டை கடலையை வறுத்தால் உப்புக்கடலை, வேகவைத்தால் சுண்டல்.

போடி- -போடியில் குடிசை தொழிலில் தயாராகும் சுவையான உப்புக்கடலை இலங்கைக்கு ஏற்றுமதியாகிறது. போடி கருப்பசாமி கோயில் ரோட்டில் வாசுதேவன் பல ஆண்டுகளாக குடிசைத் தொழிலாக உப்புக்கடலை,நிலக்கடலை, பட்டாணி விற்பனை செய்கிறார். இவற்றிற்கு வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பு இருக்கும். உரிமையாளர் எஸ்.வாசுதேவன் கூறுகையில்: கொண்டை கடலையை வறுத்தால் உப்புக்கடலை, வேகவைத்தால் சுண்டல். உப்பும், மஞ்சள் சேர்க்காமல் வறுத்தால் பொரிகடலை. நம் முன்னோர்கள் உப்புக்கடலை, பொரி, பட்டாணி, கடலை பருப்பை விரும்பி சாப்பிட்டனர். இதில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளதால் இளமையாகவும், எலும்பு வளர்ச்சி, உடல் வலிமைக்கு சிறந்தது. தற்போது நாகரிக வளர்ச்சியாக பீசா, பர்கர் என பாஸ்ட் புட் உணவை பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கிறது. கொண்டை கடலையை கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் கொள்முதல் செய்கின்றோம்.கொண்டை கடலையுடன் மஞ்சள், உப்பு சேர்த்து கை வறுவலாக வறுத்து உப்புக் கடலையாக மாற்றுகின்றோம்.உப்புக்கடலை, பட்டாணி, பொரிகடலை, நிலக்கடலை பருப்பு இவற்றை அனைவரும் சாப்பிடும் வகையில் பொரி உருண்டை, நாட்டு கருப்பட்டி சேர்த்த சத்துமாவாக தருகின்றோம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர். சுவையான உப்புக்கடலை தமிழகம் மட்டுமின்றி இலங்கைக்கு கப்பல் மூலம் துாத்துக்குடி வழியாக 10 ஆண்டுகளாக தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் 10 டன் முதல் 15 டன் அனுப்புகிறேன். தற்போது குவிண்டால் ரூ.8500 விலை உள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X