பொது செய்தி

தமிழ்நாடு

தீர்த்த சுனையோடு திம்மராய பெருமாள் தினமும் வருகை தரும் சித்தர் வடிவ கிளி

Added : அக் 15, 2021
Share
Advertisement
தேனி-தேனி--பெரியகுளம் ரோட்டில் அன்னஞ்சி விலக்கில் இருந்து என்.ஜி.ஓ., காலனி வழியாக மூன்றரை கி.மீட்டர் துாரம் மேற்கே செல்ல மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துஉள்ளது திம்மராய பெருமாள் கோயில். 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் குன்றின் மேல் வற்றாத தீர்த்த சுனையோடு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த சுனையில் ஆண்டு முழுதும் நீர் இருக்கும்.இக்கோயிலில் மூலவராக

தேனி-தேனி--பெரியகுளம் ரோட்டில் அன்னஞ்சி விலக்கில் இருந்து என்.ஜி.ஓ., காலனி வழியாக மூன்றரை கி.மீட்டர் துாரம் மேற்கே செல்ல மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துஉள்ளது திம்மராய பெருமாள் கோயில். 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் குன்றின் மேல் வற்றாத தீர்த்த சுனையோடு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த சுனையில் ஆண்டு முழுதும் நீர் இருக்கும்.இக்கோயிலில் மூலவராக திம்மராயபெருமாள் இருக்கிறார். இவரோடு விநாயகர், ராகு, கேது, ஆஞ்சநேயர், சன்னாசியப்பன், அய்யனார், கருப்பசாமியை வழிபடலாம். குளிர், வெம்மையாள் ஏற்படும் பிணிகளை களைந்து குன்றாத வாழ்வும், குறையாத செல்வமும், செழிப்பான மழையும், திருமண வரமும், குழந்தை பாக்கியமும், குடும்ப பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.ஸ்தல வரலாறு500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிறுவன் மாடுகள் மேய்த்தான். தினமும் அவனது காராம் மலட்டு பசு ஒன்று குன்றில் படுப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. அப்போது பசுவின் மடியில் குழந்தை ஒன்று பால் குடித்தது. சிறுவன் குழந்தையை துாக்க மண் பொம்மையாக மாறியது. இரவில் வீட்டில் வைத்து சிறுவன் துாங்கியபோது மண் பொம்மை மாயமானது.மீண்டும் மேய்ச்சலுக்கு சென்ற பசு மடியில் பால் குடித்த குழந்தையை சிறுவன் துாக்க மண் பொம்மையாக மாறியதை வீட்டுக்கு எடுத்து வந்து குலுக்கையின் உள்ளே வைத்து அடுக்குபானையால் மூடினான். மறுநாளும் பொம்மை மாயமானது. சம்பவம் குறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறினான்.சிறுவனின் தந்தை கனவில் வந்த திம்மராய பெருமாள் சுவாமி, கோயில் கட்டி வழிபட கூற அவர் அதை நிறைவேற்றினார். முதலில் திறந்தவெளியாகவும், அதன்பிறகு கல்துாண்களோடும் கூடாரமாக இருந்த கோயிலுக்கு கல்மண்டபம் கட்டப்பட்டது. தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு ஆக., 20ல் கும்பாபிேஷகம் நடந்தது.தினமும் வரும் கிளிமுன்னதாக கும்பாபிேஷகத்துக்கு கொடியேற்றியபோது கொடிமரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன்பிறகு கோயில் கருவறை கோபுரம் துவாரத்துக்குள் சென்று வந்தது. தற்போது தினமும் காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்ளும், மாலை 5:00 முதல் 6:00 மணிக்குள்ளும் வரும் கிளி கோயிலை சுற்றி வருவதோடு உணவு சாப்பிட்டு செல்கிறது. இதை சட்டை முனிநாதர் சித்தர் வடிவமாக பார்ப்பதாக பக்தர்கள் கூறினர்.பூஜை எப்போதுதினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரையும், மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும் பூஜை நடக்கிறது. சனிக்கிழமை 16 அபிேஷகம் நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X