பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 4 தொழிற்பேட்டைகளை உருவாக்க மடீட்சியா கோரிக்கை

Added : அக் 15, 2021
Share
Advertisement
மதுரை-மதுரையில் நான்கு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க வேண்டும் என சென்னையில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் அன்பரசனிடம் மடீட்சியா நிர்வாகிகள் வலியுறுத்தினர்.மடீட்சியா தலைவர் சம்பத் கூறியதாவது:மதுரையில் மூன்றுதொழிற்பேட்டைகள் தற்போது நிரம்பிய நிலையில் புதிய தொழில்முனைவோருக்கு தொழில் துவங்க இடமின்றியுள்ளது.சிறு, குறு தொழில்களுக்கு அரசு கொள்முதலில் 25 சதவீதம் வரை

மதுரை-மதுரையில் நான்கு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க வேண்டும் என சென்னையில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் அன்பரசனிடம் மடீட்சியா நிர்வாகிகள் வலியுறுத்தினர்.மடீட்சியா தலைவர் சம்பத் கூறியதாவது:மதுரையில் மூன்றுதொழிற்பேட்டைகள் தற்போது நிரம்பிய நிலையில் புதிய தொழில்முனைவோருக்கு தொழில் துவங்க இடமின்றியுள்ளது.சிறு, குறு தொழில்களுக்கு அரசு கொள்முதலில் 25 சதவீதம் வரை ஒதுக்கீடு மற்றும் சப்ளை செய்யும் பொருட்களுக்கு 45 நாட்களுக்குள் பண பட்டுவாடா என்ற விதிகள் இருந்தும் மின்வாரியம் உட்பட சில அரசு நிறுவனங்களில் அந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை.தனியார் தொழிற்போட்டை திட்டத்தின் கீழ் புதிய, ஏற்கனவே உள்ள தொழில்களுக்கு பாரபட்சமின்றி 75 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். 2021 -22ல்அமையும் உயர் மட்ட மாநில அளவிலான சிறு, குறு, நடுத்தர தொழில்கள், சிட்கோ ஆலோசனை குழுவில் மடீட்சியாவிற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றார். செயலாளர் லட்சுமிநாராயணன், பொருளாளர் சந்திரசேகரன், இணைச் செயலாளர் பன்சிதர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X