பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் இடமாறுதல்; டி.ஜி.பி., எச்சரிக்கை

Added : அக் 15, 2021
Share
Advertisement
மதுரை : 'போலீசாருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினால், ஒரு வாரத்திற்குள் அதை அமல்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். நெல்லையில் தொடர் கொலைகளால், வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடலுார் போலீஸ்காரர் அலெக்ஸ் ஜாய்ஸ், பாபநாசம் அணை பாதுகாப்பு பணியில்
 போலீசார் இடமாறுதல்; டி.ஜி.பி., எச்சரிக்கை

மதுரை : 'போலீசாருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினால், ஒரு வாரத்திற்குள் அதை அமல்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

நெல்லையில் தொடர் கொலைகளால், வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடலுார் போலீஸ்காரர் அலெக்ஸ் ஜாய்ஸ், பாபநாசம் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார்.கடந்த மாதம், பிறந்து இறந்த குழந்தைக்காக சடங்கு செய்ய இவர் விடுப்பு கேட்டார். தேர்தல் பணியை காரணம் காட்டி விடுப்பு தரவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்டார். இது, வேகமாக பரவியதை தொடர்ந்து, அவருக்கு உடனடியாக விடுப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு, மூன்று மாதங்களுக்கு முன், கடலுாருக்கு இடமாறுதல் வழங்கியும், அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், அனைத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி.,சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கை: இடமாறுதல் வழங்கப்பட்டும், பணியாற்றும் இடத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் இருப்பது விரும்பத் தகுந்தது அல்ல. தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவுகள் தவிர, ஐ.ஜி., - டி.ஐ.ஜி., அலுவலக உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படுவது இல்லை.

எனவே, இடமாறுதல் உத்தரவுகளை, ஒரு வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் நிர்வாக சிக்கல் இருந்தால், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X