பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீஸ் துறையில் 13,406 பணியிடங்கள் காலி

Added : அக் 15, 2021
Share
Advertisement
மதுரை : தமிழக போலீஸ் துறையில், 13 ஆயிரத்து 406 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.போலீஸ் துறைக்கு, மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ் எனும் டி.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர்.தமிழக போலீஸ் சீருடை பணியாளர்
 தமிழக போலீஸ் துறையில் 13,406 பணியிடங்கள் காலி

மதுரை : தமிழக போலீஸ் துறையில், 13 ஆயிரத்து 406 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

போலீஸ் துறைக்கு, மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ் எனும் டி.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர்.தமிழக போலீஸ் சீருடை பணியாளர் தேர்வாணையம்மூலம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபிள் வரை தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில் உடல் தகுதி, எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஸ்டேஷன், ஆயுதப்படை, பட்டாலியன் படைக்கு நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது, தமிழகத்தில் 14 டி.ஜி.பி.,க்கள்; 17 ஏ.டி.ஜி.பி.,க்கள் உள்ளனர். உயர் அதிகாரிகள் பணியிடங்கள் பெரும்பாலும் உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன. அதேசமயம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபிள் வரையிலான பணியிடங்கள், ஆண்டுதோறும் பற்றாக்குறையாகவே உள்ளன.கடந்த ஜூலை கணக்கெடுப்பின்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமையும், மன அழுத்தமும் ஏற்படுகிறது.

வார விடுமுறை எடுக்க, போலீசாருக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுமதித்துள்ள நிலையில், ஆள் பற்றாக்குறையால் விடுமுறை எடுக்க அனுமதிப்பதே இல்லை என்பதே உண்மை. போலீசார் நலன் கருதி, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஐ.ஜி., முதல் கான்ஸ்டபிள் வரை...

(2021 ஜூலை வரையிலான கணக்கெடுப்பு)
பதவி ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை ஆண் பெண் மொத்தம் காலியிடம்
ஐ.ஜி., 38 27 5 32 6டி.ஐ.ஜி., 31 12 15 27 4எஸ்.பி., 146 116 23 139 7எஸ்.பி.,(ஆயுதப்படை) 6 6 0 6/0கமாண்டன்ட்(பட்டாலியன்) 10 10 0 10 0ஏ.டி.எஸ்.பி., 166 136 19 155 11துணை கமாண்டன்ட் 16 16 0 16 0டி.எஸ்.பி., 717 601 27 628 89டி.எஸ்.பி.,(ஆயுதப்படை) 79 78 0 78 1உதவி கமாண்டன்ட் 52 25 3 28 24இன்ஸ்பெக்டர் 2458 1364 1087 2451 7இன்ஸ்பெக்டர்(பட்டாலியன்) 151 140 11 151 0இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை) 317 275 16 291 26எஸ்.ஐ., 8792 5432 993 6425 2367எஸ்.ஐ., (ஆயுதப்படை) 1240 785 37 822 418எஸ்.ஐ.,(பட்டாலியன்) 477 279 119 398 79போலீஸ் 1,16,569 85,659 20,543 1,06,202 10,367

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X