பொது செய்தி

தமிழ்நாடு

சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை

Added : அக் 15, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.நவராத்திரி விழாவையொட்டி மக்கள் அம்மனை வழிபட்டு விரதம் இருப்பதால், அசைவ உணவான மீன் விலை தமிழகம், கேரளாவில் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அக். 6 முதல் பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. உற்பத்தி விலையில் மானிய டீசல் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

ராமேஸ்வரம் : சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

நவராத்திரி விழாவையொட்டி மக்கள் அம்மனை வழிபட்டு விரதம் இருப்பதால், அசைவ உணவான மீன் விலை தமிழகம், கேரளாவில் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அக். 6 முதல் பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. உற்பத்தி விலையில் மானிய டீசல் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.9 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடல், மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்தது.

இதனால் நேற்று ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் மணிக்கு 30 முதல் 35 கி.மீ., வேகத்தில்சூறாவளி வீசியதால், மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இன்று காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம், மண்டபம் மீன்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள் வருவாய் இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X