பொது செய்தி

இந்தியா

புதிய வீரர்கள், நவீன ஆயுதங்கள், ட்ரோன்: எல்லையில் குளிரை தாங்க வீரர்களுக்கு வசதி

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : கிழக்கு லடாக்கில் சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு, குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நவீன ஆயுதங்கள், 'ட்ரோன்'களுடன், புதிய மாற்று வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கண்காணிப்புஇந்தியா மற்றும் சீனா, 3,488 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. கடந்தாண்டு மே மாதத்தில் கிழக்கு லடாக்குக்குள் நுழைய
Indian Army, Ladakh, China

புதுடில்லி : கிழக்கு லடாக்கில் சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு, குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நவீன ஆயுதங்கள், 'ட்ரோன்'களுடன், புதிய மாற்று வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


கண்காணிப்பு


இந்தியா மற்றும் சீனா, 3,488 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. கடந்தாண்டு மே மாதத்தில் கிழக்கு லடாக்குக்குள் நுழைய சீன ராணுவம் முயன்றது. அதை நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. அதைத் தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் அவ்வப்போது கண்காணிப்பு மட்டுமே இருந்து வந்த கரடுமுரடான எல்லைப் பகுதியில், தற்போது படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு குளிர்காலத்தில் நம் படை வீரர்கள் அதிக சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. குளிர் மற்றும் பனிக் காலம் விரைவில் துவங்க உள்ளதால் வீரர்களுக்கு தேவையான வசதிகள் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளன.

எல்லை வரை செல்வதற்கு தேவையான சாலைகள், பாலங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன. மேலும், வீரர்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் எல்லையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சீனாவுடனான எல்லையில், ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.


latest tamil news




தகுந்த பதிலடி


குளிர்காலத்தை சமாளிக்க வசதியாக அங்கு நீண்ட நாட்கள் பணியில் இருந்த வீரர்கள் வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டு, புதிய வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளனர். குளிரை சமாளிக்க தேவையான உடைகள் வழங்கப்பட்டுள்ளன.அடுத்த சில மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் எரிபொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு லடாக்கில் இதற்காக புதிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிக்காக 'ட்ரோன்'களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த சீதோஷ்ண நிலையிலும் பயணிக்கக் கூடிய ஹெலிகாப்டர்கள், வஜ்ரா ரக பீரங்கிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் போது உடனடியாக களமிறங்க, 'ரபேல்' போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

எதிரிகளின் ட்ரோன்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.கடும் குளிர் மற்றும் பனியை பயன்படுத்தி, சீன ராணுவம் தாக்குதல் நடத்த முயன்றால், தகுந்த பதிலடி கொடுக்க படைகள் தயாராக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
15-அக்-202118:50:52 IST Report Abuse
M  Ramachandran சீனன் நமக்கு கற்று கொடுத்த பாடம் சீனான் மிருகத்தைய விட மோசமான நடத்தை உள்ளவன் என்பது. நமது வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத பாடம். சேனா தலைமை நாக்கு மாட்டு மெல்ல அந்த நாட்டு மக்களுக்கும் நம்ப தகாதவன்
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
15-அக்-202111:53:14 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam "நாடு அதை நாடு, நாடாவிட்டால் ஏது வீடு" நாடில்லை என்றால், கோடி கோடியாகச் சேர்த்து என்ன பயன்? மண்டரினில்தான் பணம் அச்சடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
15-அக்-202111:43:05 IST Report Abuse
Anand எமது அரசுக்கு பாராட்டுக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X