எல்லையில் ஊடுருவல்; 3 தீவிரவாதிகள் கைது

Added : அக் 15, 2021
Share
Advertisement
புதுடில்லி : மியான்மரில் இருந்து நம் எல்லைக்குள் ஊடுருவிய என்.எஸ்.சி.என்., - கே பயங்கரவாதிகள் மூன்று பேரை அசாம் ரைபில்ஸ் படைப்பிரிவினர் கைது செய்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், நம் நாட்டுடன் 1,640 கி.மீ., துாரம் உடைய எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தை இணைத்து 'கிரேட்டர் நாகாலாந்து' உருவாக்கும்படி
 எல்லையில் ஊடுருவல்; 3 தீவிரவாதிகள் கைது

புதுடில்லி : மியான்மரில் இருந்து நம் எல்லைக்குள் ஊடுருவிய என்.எஸ்.சி.என்., - கே பயங்கரவாதிகள் மூன்று பேரை அசாம் ரைபில்ஸ் படைப்பிரிவினர் கைது செய்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், நம் நாட்டுடன் 1,640 கி.மீ., துாரம் உடைய எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தை இணைத்து 'கிரேட்டர் நாகாலாந்து' உருவாக்கும்படி என்.எஸ்.சி.என்., - கே எனப்படும், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இவர்கள் அண்டை நாடான மியான்மரில் பதுங்கி இருந்து, நம் நாட்டுக்கு எதிரான சதி திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிரவாத குழுக்களை ஒடுக்கும் பணியில் மியான்மர் அரசு ஒத்துழைப்பு தருகிறது.

இதையடுத்து இந்தியா - மியான்மர் எல்லைப் பகுதியில் நம் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் பகுதியில் இருந்து நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற என்.எஸ்.சி.என்., - கே தீவிரவாதிகள் மூவரை, நாகாலாந்தின் மோன் நகரில் வைத்து அசாம் ரைபிள்ஸ் படையினர் நேற்று கைது செய்தனர்.இவர்கள் நம் பகுதிக்குள் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X