தைவானில் தீ விபத்து; 46 பேர் உடல் கருகி பலி

Added : அக் 15, 2021
Share
Advertisement
தைபே : தைவானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.கிழக்காசிய நாடான தைவானின் காசியுங் நகரில், வணிக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி உள்ளடக்கிய குடியிருப்பு கட்டடம் உள்ளது. 13 அடுக்கு மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென கட்டடம் முழுதும் பரவியதால், அதில் சிக்கி இருந்தவர்கள்
 தைவானில் தீ விபத்து; 46 பேர் உடல் கருகி பலி

தைபே : தைவானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.

கிழக்காசிய நாடான தைவானின் காசியுங் நகரில், வணிக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி உள்ளடக்கிய குடியிருப்பு கட்டடம் உள்ளது. 13 அடுக்கு மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென கட்டடம் முழுதும் பரவியதால், அதில் சிக்கி இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தீயணைப்புப் படையினர், கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்; 41 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X