பொது செய்தி

தமிழ்நாடு

அணையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Added : அக் 15, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: அணையில் எந்த நேரத்திலும், நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்யும் தொடர் மழையால், ஓசூர், கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 828 கன அடியாக இருந்த

கிருஷ்ணகிரி: அணையில் எந்த நேரத்திலும், நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்யும் தொடர் மழையால், ஓசூர், கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 828 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 947 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று, 1,529 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 50.40 அடிக்கு நீர் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X