பொது செய்தி

இந்தியா

அப்துல் கலாமின் 90வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். சிறுவயதில் ஏழ்மையின் பிடியில் சிக்கிய அப்துல்கலாம், கல்வியில் சிறந்து விளங்கி, இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது
APJAbdulKalam, Kalam, PMModi, Birthday, Wishes, அப்துல்கலாம், கலாம், பிறந்தநாள், தலைவர்கள், வாழ்த்து

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். சிறுவயதில் ஏழ்மையின் பிடியில் சிக்கிய அப்துல்கலாம், கல்வியில் சிறந்து விளங்கி, இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்துல் கலாம் தலைமையில் அணு ஆயுத சோதனை நடத்தி, இந்தியா தனது பலத்தை உலகிற்கு வெளிக்காட்டியது. இதன்மூலம் புகழ்பெற்ற அப்துல் கலாம் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.

இளைஞர்கள், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் சொற்பொழிவாற்றும் இவரது பிறந்தநாளான அக்.,15 ஐ.நா சபையால் உலக மாணவர் தினமாக 2010ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர்கள் தினமாக அக்டோபர் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவர் 2015ம் ஆண்டு ஜூலை 27ல் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுதே மாரடைப்பில் காலமானார். இன்று (அக்.,15) அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உதம்பூரில் உள்ள வடக்கு பிராந்திய ராணுவ அலுவலகத்தில் கலாமின் புகைப்படத்திற்கு கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


latest tamil news



பிரதமர் மோடி:

ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்.


ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன்:





தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:



அ.ம.மு.க பொதுச்செயலர் தினகரன்:

'சாதிக்க வேண்டும்' என்ற கனவும், 'உறுதியாக சாதிப்போம்' என்கிற நம்பிக்கையும், அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர். எல்லோருக்கும் பிடித்த இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று! சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாம் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம்!

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202123:16:32 IST Report Abuse
பேசும் தமிழன் அய்யா அப்துல் கலாம் அவர்கள் சிறந்த தேசப்‌பற்றாளர் ... அவரை மற்றுமொரு தேச தந்தை என்று போற்றும் அளவுக்கு தகுதியானவர்... உண்மையான மதசா‌ர்ப‌ற்ற தலைவர்... அவரின் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
15-அக்-202117:17:11 IST Report Abuse
vbs manian கலாம் விஞ்ஞான வளர்ச்சி தொழில் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். அவரை போற்றும் தமிழக அரசியல் வாதிகள் ஸ்டெர்லிட்டை மூடினார்கள். நியூட்ரினோ வர விடவில்லை. குடன் குளம் அணுமின் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இரட்டை வேடம்.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
15-அக்-202116:43:09 IST Report Abuse
Bala முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். அர்ஜுனனை போல் மிகவும் சோர்ந்து மனமுடைந்து இருந்த நேரத்தில் ஸ்வாமி சிவானந்தரின் சந்திப்பு தன் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது என்று கூறியுள்ளார். ஸ்ரீமத் பகவத் கீதையின் படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். வெற்றி கண்டார். திருக்குறள் அவருக்கு இன்னொரு வழிகாட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X