பொது செய்தி

இந்தியா

" கலாசாரம், மதம், வரலாற்றை சீர்குலைக்க முயற்சி " - மோகன் பகவத்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
நாக்பூர்: ‛‛ தலிபான்கள் மாறியிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் மாறப்போவது கிடையாது'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், விஜயதசமியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரிவை அதிகப்படுத்தும் கலாசாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டை ஒற்றுமைபடுத்தவும், அன்பை முன்னிலைப்படுத்தும்
mogahbagawat, RSS, pakistan, india, இந்தியா, ஆர்எஸ்எஸ், மோகன்பகவத், பாகிஸ்தான்

நாக்பூர்: ‛‛ தலிபான்கள் மாறியிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் மாறப்போவது கிடையாது'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், விஜயதசமியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரிவை அதிகப்படுத்தும் கலாசாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டை ஒற்றுமைபடுத்தவும், அன்பை முன்னிலைப்படுத்தும் கலாசாரம் தான் நமக்கு முக்கியம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற சிறப்பு பண்டிகைகளை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.

தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது !


latest tamil news



நாடு பிரிவினை செய்யப்பட்டது வரலாற்றில் சோகமான நாள். இழந்த பெருமையை மற்றும் ஒற்றுமையை மீட்கவும், வரலாற்றை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், உண்மையான வரலாற்றை நாம் எதிர்கொள்ளவது அவசியம். இந்திய கலாசாரத்தை மதிக்க வேண்டும். தற்போதைய இந்திய கலாசாரம், மதம், வரலாற்றை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.

தலிபான்கள் வரலாறு நமக்கு தெரியும். சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது.தலிபான்கள் கூட மாறியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் மாறவில்லை, அது மாறாது. இந்தியா குறித்த சீனாவின் நோக்கம் மாறி உள்ளதா? நமது எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கையை உருவாக்குவதுடன். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பாடுபடுகிறது.கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

ஓடிடி தளங்களில் எதை காட்ட வேண்டும் என்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கோவிட் பரவலுக்கு பிறகு குழந்தைகளின் கைகளில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனை தடுப்பது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.

மக்கள் தொகை கொள்கையை மீண்டும் பரிசீலனை செய்து, அடுத்து 50 ஆண்டுகளுக்கு ஏற்றவாறு புதிய கொள்கை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-அக்-202121:59:44 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தேசவிரோத மூர்க்கர்கள் என்னென்ன பெயர்களுடன் திரிகிறார்கள், அவர்களது பிரச்சார நோக்கமென்ன, அஜெண்டா என்னென்ன, அதை எப்படியெல்லாம் நிறைவேற்ற துடிக்கிறார்கள் அனைத்தையும் இந்த செய்திக்கு வந்துள்ள கருத்துக்களை படித்தாலே புரிந்து கொள்ளலாம்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
15-அக்-202120:16:51 IST Report Abuse
Sivagiri ( பகுத்தறிவின்மையை வளர்ப்பது - போலி சமத்துவம் பேசி ஜாதியை வளர்ப்பது - நாடக காதல் - கன்வெர்ட்டிங் - போலி தமிழிஸ்ம் - என்று பல்வேறு கோணங்களில் ) ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களை அழிப்பது மட்டுமே எங்கள் கொள்கை . . என்று பகிரங்கமாக அறிவித்துள்ள பல பெயர் கொண்ட ஒரே கூட்டம் தமிழ்நாட்டில் இருப்பது உங்களுக்கு தெரியவில்லை போல . . . உங்களுக்கு தமிழ் தெரியாததும் - தமிழ்நாட்டில் ஹிந்தி தெரியாததும் - முழுவதும் தீயசக்திகள் கையில் உள்ள மீடியாக்கள் - இவர்களின் பெரிய பலம் -
Rate this:
Cancel
15-அக்-202116:11:04 IST Report Abuse
CHANDRA MOHAN well said.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X