தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் : கவுரவ விரிவுரையாளர் சங்கம் வலியுறுத்தல்

Added : அக் 15, 2021
Share
Advertisement
மதுரை : 'தமிழகத்தில் பல்கலை,அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தகுதியுள்ள பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு அரசு உறுப்பு கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரையில் அச்சங்க மாநில தலைவர் கதலி நரசிங்கபெருமாள் கூறியதாவது:மாநிலத்தில் பல்கலை மற்றும் அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில்பணியாற்றும் கவுரவ


மதுரை : 'தமிழகத்தில் பல்கலை,அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தகுதியுள்ள பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு அரசு உறுப்பு கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் அச்சங்க மாநில தலைவர் கதலி நரசிங்கபெருமாள் கூறியதாவது:
மாநிலத்தில் பல்கலை மற்றும் அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில்பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் வாழ்வாதாரம் ஆண்டுதோறும் கீழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.கொரோனாவால் கல்வி, மருத்துவம், உணவு, போக்குவரத்து போன்ற முக்கிய தேவைக்கு கூட செலவிட முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நடக்கிறது.

தற்போது மதுரை காமராஜ் பல்கலையில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே 'சமமான வேலைக்கு சமமான ஊதியம்' என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இவர்களுக்கு சம்பளம் உயர்த்தி, தகுதியுள்ளவர்களை நிரந்தரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X