தலிபான் பாணியில் இளைஞர் கொலை; விவசாயிகள் போராட்ட களம் அருகே பரபரப்பு

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி:வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு பகுதியில், இளைஞர் ஒருவர் கை துண்டித்து கொலை செய்யப்பட்டு, உடல் போலீஸ் தடுப்பில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் லக்பீர் சிங் என தெரியவந்துள்ளது.இது தொடர்பாக டிஎஸ்பி ஹன்ஸ்ராஜ் கூறியதாவது: இன்று காலை 5 மணியளவில், இளைஞர் ஒருவரின்
இளைஞர், கொலை,

புதுடில்லி:வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு பகுதியில், இளைஞர் ஒருவர் கை துண்டித்து கொலை செய்யப்பட்டு, உடல் போலீஸ் தடுப்பில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் லக்பீர் சிங் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக டிஎஸ்பி ஹன்ஸ்ராஜ் கூறியதாவது: இன்று காலை 5 மணியளவில், இளைஞர் ஒருவரின் உடல் கை, கால்கள் வெட்டப்பட்டு, தொங்க விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. யார் காரணம் என்பது தெரியவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டிலி என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள இந்த கொடூரமான கொலை சம்பவத்திற்கு நிஹாங்ஸ் என்ற சீக்கிய குழு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், உடல் அருகே வாள் ஏந்தி சுற்றி நின்று கொண்டிருப்பதும், அந்த வாலிபர் கை வெட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்த காட்சிகள் பதிவாகி உள்ளன.


latest tamil news



மற்றொரு வீடியோவில் அந்த இளைஞரின் உடல் தலைகீழாக கயிற்றில் கட்டப்பட்டு தொங்க விடப்படும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

சடலத்தை கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அந்த இளைஞர் சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாகவும், அதனால், ஆத்திரமடைந்த நிஹாங்ஸ் அமைப்பினர், அந்த இளைஞரை அடித்து கொலை செய்து கைகளை வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-அக்-202120:38:03 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பாகிஸ்தான்-சீனா-தாலிபான்-காங்கிரஸ்-டீம்கா-டுமீல் கூலிபன் இது ஒரு மெகா கூட்டணி
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
15-அக்-202120:31:49 IST Report Abuse
sankaranarayanan இந்தியாவில் உயர்நீதி மன்றம் என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக மாறிவிட்டார்கள். ஒரு வருடமாக உச்ச நீதி மன்றம் இவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது பயப்படுகிறது. அவர்களே அனுப்பிய குழுவிற்கு அவமரியாதைதான் கிடைத்தது . பாராளுமன்றத்தில் மக்கள் பிரதி நிதிகள் அனைவராலும் விவாதித்து, ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று, சட்டமாக வந்ததை அமல் படுத்தமுடியாமல் ஒரு நாடு இருக்கின்றது என்றால் அது பாரதம்தான். ஏனென்றால் இங்கு நீதி இல்லை. நீதிமன்றம் குறுக்கிட்டு சட்டத்தை அமல்படுத்த ஆணையிட்டால் யார் என்ன செய்யமுடியம்? இப்போது அவரவர்கள் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். நாட்டின் ஒற்றுமை குலைக்கிறார்கள். அந்நியனுக்கு - அந்நிய சக்திகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள்., இனியாவது உச்சநீதி மன்றம் தலையிட்டு, ஒன்று இந்த சட்டம் செல்லாது என்று பகிரங்கமாக சொல்லவேண்டும், இல்லையேல் சில திருத்தங்கள் செய்து வெளியிட வேண்டும். அதுவும் இல்லையேல் உறுதியாக் நின்று , அரசாங்கத்துடன் இன்று சட்டத்தை அமல் படுத்த வேண்டும். இது நீதி மன்றத்தின் கடமையாகும். இனியும் தாமதம் இல்லாமல் தலையிட்டு ஒரு முடிவிற்கு வரவே இல்லை என்றால் நாடு நாசமாகிவிடும் அந்நிய சக்திகள் ஆட்சியில் தலையிட்டு நாட்டில் குழப்பன்தான் பெருகும் உச்ச நீதி மாற்றந்தான் முடிவு செய்ய வேண்டும் ஜெய் ஜவான் ஜெய் கிஷான் பாரத் மாதா கி ஜெய்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
16-அக்-202119:01:15 IST Report Abuse
தமிழ்வேள்...காங்கிரஸ் முற்றிலும் ஒழியும் வரை இந்த நாடு உருப்படாது ......
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
15-அக்-202120:28:43 IST Report Abuse
S Regurathi Pandian விவசாயிகள் போராட்டத்திற்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்? செய்தி குழப்பமேற்படுத்தும் நோக்கில் உள்ளது. சிலர் இதற்கு விவசாயிகள் போராட்டத்தை பற்றி திட்டுவது மொட்டைத்தலைக்கும் மூலங்களுக்கும் முடிச்சுப்போடும் செயல். அவதூறகான பேச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X