ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

Added : அக் 15, 2021 | |
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில் லாரி பட்டறை, அரசு மருத்துவமனையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் நகரில் லாரி பட்டறைகள் உள்ளிட்ட வர்த்தக, தொழில் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்படுகின்றன. நேற்று ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. அதை முன்னிட்டு தங்கள் நிறுவனங்களை இரண்டு நாட்களாக தூய்மைப்படுத்தி, நேற்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பூஜையை முடித்த சில பட்டறைகளில்

நாமக்கல்: நாமக்கல்லில் லாரி பட்டறை, அரசு மருத்துவமனையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் நகரில் லாரி பட்டறைகள் உள்ளிட்ட வர்த்தக, தொழில் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்படுகின்றன. நேற்று ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. அதை முன்னிட்டு தங்கள் நிறுவனங்களை இரண்டு நாட்களாக தூய்மைப்படுத்தி, நேற்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பூஜையை முடித்த சில பட்டறைகளில் திருஷ்டி பூசணியை சாலையில் உடைத்தனர். அதனால் வாகனவோட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அரசு மருத்துவமனை ரத்தவங்கி, அறுவைசிகிச்சை மையம் ஆகிய பிரிவுகளில் ஆயூத பூஜை கொண்டாடப்பட்டது. மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அதேபோல், குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலூர், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் என, மாவட்டம் முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடைகள், மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X