ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலை தலைமை தாங்க பெரும்பான்மை பலத்துடன் தேர்வான இந்தியா

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
ஜெனிவா: ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் அங்கமாக விளங்கும் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் மூன்று ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும். தற்போது பதவி வகிக்கும் இந்தியாவின் பதவிக்காலம் வரும் டிச.,31ம் தேதியோடு முடிவடைகிறது.இந்நிலையில், 2022 - 24ம் ஆண்டிற்கான ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா., பொதுசபையில் நேற்று (அக்., 14) வாக்குப்பதிவு நடைபெற்றது.
UN, Human Rights Council, India, re-elected, ஐநா, மனித உரிமைகள் கவுன்சில், தலைமை தாங்கும் இந்தியா,

ஜெனிவா: ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் அங்கமாக விளங்கும் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் மூன்று ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும். தற்போது பதவி வகிக்கும் இந்தியாவின் பதவிக்காலம் வரும் டிச.,31ம் தேதியோடு முடிவடைகிறது.


latest tamil news


இந்நிலையில், 2022 - 24ம் ஆண்டிற்கான ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா., பொதுசபையில் நேற்று (அக்., 14) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், இந்தியா பல்வேறு நாடுகளின் பெரும் ஆதரவுடன் மீண்டும் 6வது முறையாக தேர்ந்தெடுக்‍கப்பட்டு உள்ளது.


latest tamil news


ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், '193 உறுப்பு நாடுகளில், தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க 184 நாடுகள் ஆதரவு அளித்து உள்ளன. 97 வாக்குகள் பெற்றாலே, தலைமை தாங்க முடியும் என்ற நிலையில் அதிகயளவு பெரும்பான்மை பலத்துடன் இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. உலக நாடுகள் இந்தியாவின் மீது வைத்திருக்‍கும் நம்பிக்‍கையை இது கட்டுகிறது. உலக அளவில் மனித உரிமைகளை நிலைநாட்ட இந்தியா எப்போதும் உறுதியாகப் போராடும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-அக்-202121:04:11 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சீன செல்வாக்கு அதிகம் உடைய ஐநாவின் ஒரு பிரிவாகிய யுனிசெப் சொல்கிறது இந்தியா பட்டினியில் நூற்றி ஒன்றாம் இடத்தில் என்று அதே ஐநா இந்தியாவை உலகிலேயே மனித உரிமைகளை அதிகம் மதிக்கும் நாடாகக் கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம் பட்டினியில் நமக்கு ஏன் அந்த ரேங்க் கிடைத்தது ? விபரங்கள் சில நாட்களில் தெரிய வரலாம்
Rate this:
Cancel
15-அக்-202119:47:40 IST Report Abuse
தமிழ் குடிமகன் உள்ளூர் போலீஸ்காரன் முதல்ல மனித உரிமைகளை வழங்கட்டும். அப்புறம் நாம உலகத்துக்கு வழங்கலாம் !!!
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-அக்-202121:39:01 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANபோலீஸ் சராசரி குடிமகனுக்கு தேவைக்கும் அதிகமாகவே உரிமைகள், அதிகாரம் கொடுத்திருக்கிறது அதுவும் தமிழகத்தில் சிறுபான்மையினத்தவர் உரிமையுடன் காவல்துறையைத் தாக்க முடிகிறது அதுவும் ரத்தம் வரும் அளவுக்கு கொடும் தாக்குதல் நடத்த முடிகிறது தமிழ்க்குடிமகன் சற்றே பின்னோக்கிப்பார்த்தால் உண்மை தெரியும் அல்லது போ-தையில் இருந்தால் தெரியாது...
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
16-அக்-202110:39:40 IST Report Abuse
Rajaஎப்படி. சாத்தன்குளத்தில் உரிமைகளும் அதிகாரமும் கொடுத்தது போலவா நடேசன் அவர்களே?...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-அக்-202119:34:08 IST Report Abuse
elakkumanan இதுக்கும் திரு மோடி அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை......இந்த அளவு ஆதரவுக்கு, எங்க பிச்சை அரசின் ஓசி சோறு விவாத குருப், நன்னபிக்கை மற்றும் நேர்மையின் உருவம் இம்ரான் பாயி, அப்பொறம் சின்பிங் போன்றோரின் சீரிய பணியே காரணம் ............டேய் பெயரில்லா அடிமைகளா......இதுதாண்டா ராஜதந்திர நடவடிக்கை மற்றும் உண்மை மற்றும் நேர்மையான உழைப்பு............நமக்கு நாமே திட்டப்படி நாமே மோதிரம் வாங்கி மேடையில் வாங்கிய கும்பலுக்கு இதெல்லாம் உணர கூட முடியாது...................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X