அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு| Dinamalar

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Added : அக் 15, 2021 | |
எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையம் கருணாம்பிகை தாயார் கோவிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயுதபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. எலச்சிபாளையம் ஒன்றியம் மணலிஜேடர்பாளையம் ஆதிநாக அருளீஸ்வரர் உடனமர் கருணாம்பிகை தாயார் கோவிலில், தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். நீண்டவரிசையில், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.* குமாரபாளையம் காளியம்மன் கோவிலில்

எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையம் கருணாம்பிகை தாயார் கோவிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயுதபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. எலச்சிபாளையம் ஒன்றியம் மணலிஜேடர்பாளையம் ஆதிநாக அருளீஸ்வரர் உடனமர் கருணாம்பிகை தாயார் கோவிலில், தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். நீண்டவரிசையில், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. அதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன், சவுண்டம்மன், அங்காளம்மன், மாரியம்மன், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர், பட்டத்தரசியம்மன், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X