மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று| Dinamalar

மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று

Added : அக் 15, 2021 | |
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் உள்ளது. நேற்று, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், ப.வேலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நாமக்கல்,

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் உள்ளது. நேற்று, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், ப.வேலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பெருந்துறை, கோவை, சேலம், ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து, 407 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிழந்தார். இறந்தவர்களின் எண்ணிக்கை, 492 உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X