பொது செய்தி

தமிழ்நாடு

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகஇன்று (அக்.,15): கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு
Heavy Rain, Weather, IMD, Chennai, கனமழை, வானிலை, சென்னை, கடலூர், விழுப்புரம்

சென்னை: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக
இன்று (அக்.,15): கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும்.

அக்.,16: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மே மாத்தூர் (கடலூர்) 7 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்) தலா 5 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.


latest tamil news


குறிப்பு: மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா - லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்கக்கடல் பகுதிகள்

அக்.,15, 16: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்

அக்.,15, 16: தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veerappan Elangovan - Erode,இந்தியா
15-அக்-202115:08:53 IST Report Abuse
Veerappan Elangovan அக்டோபர் 27 , 28 , 29 , 30 -2021 ஆகிய நாட்களில் 9 கிரகங்களும் வலுப்பெற்று இருப்பதால் இந்த நாட்களில் உலகில் ஏதோ ஒரு அதிசியம் நடக்கப்போகிறது இது போன்று 9 கிரகங்களும் வலுப்பெறுவது 108 வருடங்கள் கழித்துத்தான் மீண்டும் நடக்கும் இந்த நாட்களை கடக்கும் வரை நிலநடுக்கம் புயல் பூகம்பம் எரிமலை வெடித்தல் மற்றும் தீவிரவாதிகளால் பாதிப்பு போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X