நீலகிரியில் 4 பேரை கொன்ற புலி பிடிப்பட்டது

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி மற்றும் கூடலூரில் 4 பேரை கொன்ற புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டில் ஏற்றினர்.நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை செப்., 25 ம் தேதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று, முதுமலை ஒம்பட்டா பகுதியில், புலியை தேடினர் , மாலை வரை புலி
புலி, Tiger, டி23

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி மற்றும் கூடலூரில் 4 பேரை கொன்ற புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டில் ஏற்றினர்.நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை செப்., 25 ம் தேதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று, முதுமலை ஒம்பட்டா பகுதியில், புலியை தேடினர் , மாலை வரை புலி இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.latest tamil newsஇரவு 9:30 மணிக்கு தெப்பகாடு - மசினகுடி சாலையில் நடந்து, சென்ற புலிக்கு, கால்நடை மருத்துவ குழுவினார் மயக்க ஊசி செலுத்திய பின்னர் பிடிக்க முயன்றனர். ஆனால், மயக்கம் தெளிந்த நிலையில் புலி, அவர்களிடம் சிக்காமல் தப்பியது.latest tamil newsஇந்நிலையில், இன்று பிற்பகலில் கூட்டுப்பாறை பகுதியில், தென்பட்ட அந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். தற்போது புதருக்குள் புலி உள்ளது. அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள வனத்துறையினர், தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புலி மயக்கமடைந்ததை தொடர்ந்து, அதனை பிடித்து கூண்டில் ஏற்றினர்.மிகப்பெரிய சாதனை


வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: 2014 முதல் இதுவரை ஆட்களை கொன்ற 4 புலிகள் வேறு வழியில்லாமல் சுட்டு பிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிடிபட்ட புலி, மாடுகள் மற்றும் 4 பேரை அடித்து கொன்றது. முதல்முறையாக ஆட்கொல்லி புலி உயிருடன் பிடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. ஊசி போட்டு பிடிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய இலக்கு. இந்த புலியை சிகிச்சை அளித்து வண்டலூர் கொண்டு செல்ல உள்ளோம். முதல்வர் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அனுமதி மறுப்பு


வனப்பகுதியில் பிடிப்பட்ட புலியை பார்க்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் ஆளுங்கட்சி டிவி சேர்ந்தவர்கள் மற்றும் விஐபிக்கள் மட்டும் அழைத்து செல்லப்பட்டனர். இதனை கண்டித்தும் புலி உயிருடன் உள்ளதா அல்லது இல்லையா என்பதை பார்க்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி வனத்துறையை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
16-அக்-202117:31:32 IST Report Abuse
INDIAN Kumar இந்த உலகம் அணைத்து உயிர்களுக்குமானது
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
15-அக்-202116:13:23 IST Report Abuse
Mohan ஐயா ராம் அவர்களே ..மற்றும் புலிப்பாசம் மிகக் கொண்ட மனிதர்களே சற்று சக மனிதன் ..அதுவும் துரதிருஷ்ட வசமாக காட்டின் அருகாமையில் உள்ள ஊர்களில் பிறந்து வளர்ந்த ஏழைகளே உங்கள் உயிரும் வாழ்வும்....ஒரு பொருட்டல்ல...ஆட்கொல்லி புலியே முக்கியம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்ட , ""கருணை மிக்க'""மனிதநேயமற்ற, விலங்கின விசுவாசிகளே வாழ்வாதாரத்திற்காக உயிருடன் விளையாடிக் கொண்டு நித்தமும் போராடி வரும் சக மனிதனின் கஷ்டத்தை முதலில் அறிந்து பின் புரிந்து உதவாவிட்டாலும் பரவாயில்லை வேட்டு வைக்க வேண்டாம். வனத்துறையினர் திறமையுடன் தமது கடமையை சரிவர செய்வதை தடுக்காமல் இருப்போமாக.....
Rate this:
Cancel
Shake-sphere - India,இந்தியா
15-அக்-202116:13:00 IST Report Abuse
 Shake-sphere இந்த புலிதான் நான்கு பேரை கொன்றது என்பதற்கு என்ன சாட்சியங்கள் உள்ளது? அந்த நான்கு பேரும் வேறு ஏதாவது காரணத்தினால் கூட இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எதற்கெடுத்தாலும் புலியினை காரணம் சொல்வது தவறான குற்றச்சாட்டு. புலி சுதந்திரமாக நடமாட இடமில்லாமல் அதனுடைய வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்வது கொடூரமான செயல் புலிகள் மிகவும் சென்சிடிவ் ஆனவை. பெரும்பாலும் புலிகளுக்கு மான் கரி தான் பிடிக்கும் சிங்கத்திற்கு எருமை கரி குதிரை கரி ஆகிவை பிடிக்கும் புலி சிறுத்தை ஆகியவைகளுக்கு பாய்ந்து சென்று மானை பிடிப்பதில் அலாதி ஆர்வம் புலிகள் அவ்வாறு கடினமாக உழைத்தே உண்கின்றன அவை மனிதனை போன்று அல்ல அவை இலவசத்தில் வாழ்வதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X