ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: வங்கதேச பிரதமர்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
தாகா: வங்கதேசத்தில் துர்கா பூஜை பந்தலுக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியது. கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர். ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு
Bangladesh PM, Those Who Attacked, Hindu Temples, Hunted Down, வங்கதேசம், பிரதமர், ஹிந்து கோவில், தாக்குதல், நடவடிக்கை

தாகா: வங்கதேசத்தில் துர்கா பூஜை பந்தலுக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியது. கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர். ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அண்டை நாடான மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாட பல்வேறு இடங்களில் பந்தல் அமைத்து துர்கை சிலைகளை நிறுவியிருந்தனர். குமில்லா என்ற பகுதியில் துர்கா பூஜை பந்தலில் குர்ஆனை அவமதித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. அதனால் கலவரம் மூண்டது. குமில்லா பகுதியில் ஏற்பட்ட கலவரம் அடுத்தடுத்த ஊர்களிலும் பரவியது. ஹிந்து கோயில்கள், துர்கா பூஜை பந்தல்கள் சூறையாடப்பட்டன. ஹிந்து குடும்பங்கள் தாக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் இறந்ததாக கூறப்படுகிறது.


latest tamil newsகலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 22 மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தசாரா விழாவுக்காக டாக்காவில் உள்ள தாக்கேஸ்வரி ஹிந்து கோவில் நிகழ்ச்சி பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்றார். கலவரம் குறித்து பேசியவர் “குமில்லாவில் நடந்த சம்பவங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. யாரும் தப்ப முடியாது. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.” என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
16-அக்-202107:19:33 IST Report Abuse
Raman இதே கதை தான் எப்போவும் சொல்லுவார்கள் ஒரு .... மாட்டார்கள்.. நம்ம கதையும் அப்படித்தானே.. ஹி ஹி ஹி ...
Rate this:
Cancel
15-அக்-202123:32:10 IST Report Abuse
பேசும் தமிழன் ஏண்டா மதம் மதம் என்று மதம் பிடித்து அலைகிறீர்கள்..... எவன் செத்தாலும் 7 அடி நிலம் தான்.... இடையில் மதம் எங்கே வந்தது
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
16-அக்-202115:18:27 IST Report Abuse
கௌடில்யன்எவன் செத்தாலும் 7 அடி நிலம் தான்....அந்த நிலம் மெரினாவில் தான் வேணும்னு ராத்திரியோட ராத்திரி கோர்ட்டுக்கு போனாங்களே...
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
15-அக்-202122:04:51 IST Report Abuse
krishnamurthy தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X