ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு; 30 பேர் பலி ?

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
கந்தஹார்: ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. பலி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.,15) கந்தஹாரில் உள்ள ஷியா மசூதியில் மக்கள் தொழுகையில் இருந்தபோது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர்
Afghanistan, Kandahar, Mosque Blast, Killed, Injured, Bomb Blast, ஆப்கானிஸ்தான், ஆப்கன், மசூதி, குண்டுவெடிப்பு

கந்தஹார்: ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. பலி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.,15) கந்தஹாரில் உள்ள ஷியா மசூதியில் மக்கள் தொழுகையில் இருந்தபோது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


latest tamil news



தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் அங்குள்ள குண்டுஸ் நகரின் சயித் அபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 50 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-202112:22:09 IST Report Abuse
அப்புசாமி ஆச்சரியமான விஷயம் என்னன்னா, பொதுமக்கள் எந்த தைரியத்தில் மூர்க்ஸ் ஆளும் இடங்களில் மசூதிக்குப் போறாங்க? ஒரு வேளை சோறு கிடைக்கும்னு போயிருப்பாங்களோ? ஆண்டவன் சோறும் குடுக்கலை. உயிரயும் எடுத்துட்டார்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
16-அக்-202112:20:11 IST Report Abuse
Rasheel ஒரு பழைய பாட்டு நினைவிற்கு வருகிறது. "வெள்ளி கிழமை, விடியும் வேளை, வாசலில் குண்டு வைத்தேன்". பள்ளி என்று சேர்த்து கொள்ளவும். என்ன கொடுமையப்பா இது? மனித தன்மை எங்கப்பா போச்சு??
Rate this:
Cancel
16-அக்-202111:50:37 IST Report Abuse
அப்புசாமி இப்பிடி இறைவனை வணங்குற எடத்திலே குண்டு வெக்கச் சொல்லி எந்த புஸ்தகத்தல போட்டிருக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X