பொது செய்தி

இந்தியா

சிறையிலிருந்து ஷாரூக் கான், கவுரி கானுடன் வீடியோ கால் பேசிய ஆர்யன்!

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள ஆர்யன் கான், சிறைத் துறை அனுமதியுடன் நேற்று (அக்.,14) 10 நிமிடம் தனது தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் பேசியுள்ளார்.மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் சில தினங்களுக்கு முன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். பலர் போதைப் பொருள்
Aryan Khan, Video Call, SRK, Gauri Khan, Money Order, ஆர்யன் கான், வீடியோ கால், ஷாருக்கான், கவுரிகான், மணி ஆர்டர்

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள ஆர்யன் கான், சிறைத் துறை அனுமதியுடன் நேற்று (அக்.,14) 10 நிமிடம் தனது தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் பேசியுள்ளார்.

மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் சில தினங்களுக்கு முன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். பலர் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் சிக்கியதால் இவ்விவகாரம் சர்வதேச செய்தியாக மாறியது. கடந்த 12 நாட்களாக அவர் சிறையில் உள்ளார். அவரது ஜாமின் மனு நான்காவது முறையாக நேற்று நிராகரிக்கப்பட்டது. அக்டோபர் 20-ல் ஜாமின் மனு பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது.


latest tamil news


இதனால் நேற்று மாலை அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். நேற்று வரை தனிமைச் சிறையில் இருந்தார். அவருக்கு கோவிட் நெகடிவ் என முடிவு வந்ததால் நேற்று மாலை பொது செல்லுக்கு மாற்றப்பட்டார். மகன் கைது பற்றி இதுவரை ஷாருக்கோ அவரது தாய் கவுரியோ வாய் திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று இருவரிடமும் சிறை அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் 10 நிமிடம் வீடியோ கால் பேசியுள்ளார். கோவிட் காரணமாக கைதிகள் வாரத்தில் 2 நாட்கள் வீடியோ காலில் பேச கோர்ட் அனுமதி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ரூ.4,500 மணி ஆர்டர்!


மேலும் அவருக்கு ரூ.4,500 மணி ஆர்டர் அனுப்பியுள்ளனர். சிறைக் கைதி வைத்திருக்க அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச தொகை அதுவாகும். சிறை கேண்டீனில் கிடைக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுவதற்காக இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஆர்யன் கானுக்கு வீட்டு உணவுகளோ, வெளி உணவுகளோ வழங்க அனுமதியில்லை என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
16-அக்-202111:46:59 IST Report Abuse
Rasheel அமைதி வழியின் முக்கிய தொழில் போதைப் பொருள் கடத்தி மற்ற மதத்தினரை முடக்குவது தான். அதிலே அவன் மகனே முடங்கி விட்டான்.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
16-அக்-202111:14:50 IST Report Abuse
Vivekanandan Mahalingam எல்லா கைதிகளுக்கும் வீடியோ பேச அனுமதி உண்டா ?
Rate this:
Anand - chennai,இந்தியா
16-அக்-202114:32:12 IST Report Abuse
Anandகோவிட் காரணமாக கைதிகள் வாரத்தில் 2 நாட்கள் வீடியோ காலில் பேச கோர்ட் அனுமதி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது....
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
16-அக்-202111:04:28 IST Report Abuse
Charles சாருக் அமித் சாஹபுடன் பேசமுடியாதா? அதுவும் இல்லென்னால் பேசாமல் பிஜேபியுடன் நட்புறவு ஏற்படுத்தலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X