ஐ.பி.எல் கிரிக்கெட் : 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை அணி

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
துபாய்:ஐ.பி.எல்., தொடரின் இறுதி போட்டியில் கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று 4 வது முறையாக சாம்பியன் ஆனது சென்னை அணி.இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14-வது சீசன் நடந்தது. இதில் 29 போட்டிகள் முடிந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இறுதி
 இன்று பைனல்: கோப்பை வெல்லுமா சென்னை அணி

துபாய்:ஐ.பி.எல்., தொடரின் இறுதி போட்டியில் கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று 4 வது முறையாக சாம்பியன் ஆனது சென்னை அணி.
இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14-வது சீசன் நடந்தது. இதில் 29 போட்டிகள் முடிந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் தோனியின் சென்னை அணி, இயான் மார்கனின் கோல்கட்டாவை சந்தித்தது.

போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக டூ பிளஸ்ஸிஸ் 86 ரன்கள், மொயின் அலி 37 ரன்கள் ருத்துராஜ் கெய்க்வாட் 32 , உத்தப்பா 31 ரன்கள் எடுத்திருந்தனர்.
அதே நேரத்தில் கோல்கட்டா அணியின் சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும், ஷிவம் மாவி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 193 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோல்கட்டா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


latest tamil news




4வது முறையாக சாம்பியன்

ஐ.பி.எல். அரங்கில் 12 தொடர்களில் சென்னை அணி 9-வது முறையாக இன்று பைனலில் மோதியது. கடந்த 2010, 2011,2018 என மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது கோல்கட்டா அணியை வென்றதன் மூலம் 4-வது முறையாக சாம்பியன் ஆகி உள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பார்த்திபன்.  சோலைபட்டி தமிழன் இல்லாத சென்னை.....
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
15-அக்-202122:31:41 IST Report Abuse
Sathyanarayanan Subramanian 93- கொல்கத்தா
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-அக்-202119:09:51 IST Report Abuse
Ramesh Sargam சென்னை அணி கொஞ்சமும் 'சொதப்பாமல்', நிதானமாக நின்று நிதானித்து ஆடினால் இன்றைய போட்டியை வென்று கப் வெல்லும். இல்லாவிட்டால், ரன்னர் அப் ஆகி வீட்டிற்கு செல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X