பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒருவர் பலி: பலர் காயம்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் தசரா பண்டிகையையொட்டி நடந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். தசரா பண்டிகையையொட்டி சத்தீஷ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் துர்கை சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அசுர வேகத்தில் வந்த கார் பக்தர்கள் கூட்டத்திற்குள்
பக்தர்கள் கூட்டம்,கார்   ஒருவர் பலி: பலர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் தசரா பண்டிகையையொட்டி நடந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

தசரா பண்டிகையையொட்டி சத்தீஷ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் துர்கை சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அசுர வேகத்தில் வந்த கார் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.


latest tamil news



இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. காரை வேகமாக ஒட்டிய டிரைவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் பலரின் கை, கால், முதுகெலும்பு முறிந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-அக்-202122:00:41 IST Report Abuse
Ramesh Sargam இனி பக்தர்கள் அதிகம் கூடும் இடங்கள், போராட்டம் நடக்கும் இடங்கள் அருகில் எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும். ஒரு சில 'விபத்துக்கள்' கவன குறைவால் ஏட்படும் விபத்துக்கள். மற்றும் சில 'பழிவாங்கும்' நடவடிக்கை 'விபத்துக்கள்'.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-அக்-202121:33:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN காங்கிரஸ்-டீம்கா-டுமீல் கூலிபன்-பாகிஸ்தான்-சீனா-தாலிபான் இது ஒரு மெகா கூட்டணி
Rate this:
Cancel
15-அக்-202120:15:40 IST Report Abuse
பேசும் தமிழன் கார் ஏற்றி கொன்ற குற்றத்துக்கு காரணமான பப்பு மற்றும் பப்பி இத்தாலி குடும்பத்தை கைது செய்ய வேண்டும்... என்ன இந்த வசனத்தை... எங்கேயோ கேட்டது போல் உள்ளதா... ஆமாம் வேறு யாரும் இல்லை உபி சம்பவத்தின் போது இவர்கள் சொன்னது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X