பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அக்., 16, 1881சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில், 1881 அக்., 16ல் பிறந்தவர், மு.கதிரேசன். திண்ணை பள்ளியில் பயின்றார். இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டார்.அதனால் ஆசிரியர் இல்லாமலேயே, 'சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், திருவாசகம், புறநானுாறு, திருக்குறள், கம்பராமாயணம்' உள்ளிட்ட இலக்கியங்களை கற்றார்.அண்ணாமலை பல்கலையில், 12 ஆண்டுகள் தமிழ்

இதே நாளில் அன்று


அக்., 16, 1881



சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில், 1881 அக்., 16ல் பிறந்தவர், மு.கதிரேசன். திண்ணை பள்ளியில் பயின்றார். இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால் ஆசிரியர் இல்லாமலேயே, 'சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், திருவாசகம், புறநானுாறு, திருக்குறள், கம்பராமாயணம்' உள்ளிட்ட இலக்கியங்களை கற்றார்.அண்ணாமலை பல்கலையில், 12 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். நாராயண சாஸ்திரி என்பவரிடம் ஹிந்தி மொழியை கற்றார். தன் இரு மொழி புலமையால், ஏராளமான மொழிபெயர்ப்பு நுால்களை இயற்றினார். மதுரையில், நான்காம் தமிழ்ச் சங்கத்தை துவக்கி வைத்த புலவர்களில், இவரும் ஒருவர். சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். 'சன்மார்க்க சபை, மணிவாசக மன்றம்' ஆகியவற்றை தோற்றுவித்தார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் படுத்த படுக்கையாய் கிடக்கும் போதும் திருவாசகத்திற்கு உரை எழுதினார். 1953 அக்., 24ம் தேதி தன், 72வது வயதில் காலமானார்.பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-அக்-202117:12:44 IST Report Abuse
Bhaskaran மஹாமஹோபாத்யாயா அதாவது ஆங்கில அரசால் பெரும்பேராசான் பட்டம் வழங்கப்பட்டவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X