பொது செய்தி

இந்தியா

ஹிந்துக்களை குறி வைக்கும் பயங்கரவாதிகள் : மோகன் பாகவத் பேச்சு

Updated : அக் 17, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (10+ 49)
Share
Advertisement
நாக்பூர் : ''ஜம்மு - காஷ்மீர் மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, அங்கு வசிக்கும் ஹிந்துக்களை பயங்கரவாதிகள் கொன்று குவிக்கின்றனர். எனவே, எல்லையில் நம் ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். உத்தரவுஜம்மு - காஷ்மீரில், ஐந்து நாள் இடைவெளியில் ஏழு அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால்
ஹிந்துக்கள், குறி, பயங்கரவாதிகள் ,மோகன் பாகவத் பேச்சு

நாக்பூர் : ''ஜம்மு - காஷ்மீர் மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, அங்கு வசிக்கும் ஹிந்துக்களை பயங்கரவாதிகள் கொன்று குவிக்கின்றனர். எனவே, எல்லையில் நம் ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.


உத்தரவு



ஜம்மு - காஷ்மீரில், ஐந்து நாள் இடைவெளியில் ஏழு அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் ஹிந்துக்கள். இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடந்த விஜய தசமி விழா நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சில கோவில்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றன. அப்படி செயல்படாத கோவில்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. பல கோவில் சொத்துக்களில் முறைகேடு நடப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹிந்து கோவில் சொத்துக்களால், ஹிந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாத பிற மதத்தினர் பலன் அடைகின்றனர். ஹிந்துக்களுக்கு தேவைப்பட்டாலும், அந்த பலன்களை அவர்களால் பெற முடியவில்லை.கோவில்களை நிர்வகிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், 'கோவில்களை அரசு உரிமை கொண்டாட முடியாது. கடவுள் மட்டுமே அதன் உரிமையாளர். பூஜை செய்வோர் நிர்வாகிகளை போன்றவர்கள். 'அதை, அரசு சில காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கலாமே தவிர, உரிமை கோர முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.எனவே, கோவில்களை நிர்வகிக்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.


அச்சம்



நம் நாட்டு மக்கள் தொகையில், பாரதிய வம்சாவளியில் தோன்றிய மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 88 சதவீதமாக இருந்தது; இது, தற்போது 83.8 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னர் 9.8 சதவீதமாக இருந்த முஸ்லிம் மதத்தினரின் எண்ணிக்கை 14.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.எனவே, அடுத்த 50 ஆண்டுகளை மனதில் வைத்து நம் தேசிய மக்கள் தொகை கொள்கையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதால், சாமானிய மக்கள் பலன் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் குறித்து மக்கள் மனதில் இருந்த அச்சம் விலகி உள்ளது. இந்த அச்சத்தை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தனர். எனவே, மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை விதைக்கவே, அங்கு வசிக்கும் ஹிந்து, சீக்கியர் போன்ற சிறுபான்மையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்று குவிக்கின்றனர். இதை மத்திய அரசு சரியாக கையாள வேண்டும். எல்லையில் உள்ள நம் ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10+ 49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
16-அக்-202122:20:28 IST Report Abuse
sankaseshan நடேசா ,மதுவந்தி கோடிஸ்வரியா ? வாரிசு கட்டுமர குடும்பத்தை விடவா ? சொல்லு ராசா சொல்லு
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-202118:09:23 IST Report Abuse
Vittalanand PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-202118:09:22 IST Report Abuse
Vittalanand இங்கே ஜார்ஜ் பொன்னையா வேனில் அங்கே மோகன் பகவத்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X