டில்லி: தேவைப்படும்போது தனியார் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு உதவும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
![]()
|
ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி போர்டு (ஓஎஃப்பி) என்கிற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தியாவின் கனரக ஆயுதங்கள் தயாரிக்கும் அரசு நிறுவனம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதிமுதல் எழு தனியார் நிறுவனங்களிடம் அளிகப்பட்டது.
கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஓஎஃப்பி-யில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த ஊழியர்கள் 7 தனியார் நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் திட்டத்தின்படி பொதுமக்களின் நலன்கருதி சில அரசு நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அவை அரசால் கட்டுப்படுத்தப்படும். அதேபோல தற்போது உயர்வையும் கான்பூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 7 தனியார் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மட்டுமல்லாமல் நைஜீரியா, மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஓஎஃப்பி ஒப்பந்த அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்களை தயாரித்து அனுப்புகிறது.
ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த இரண்டாவது பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமாக ஓஎஃப்பி திகழ்ந்துவந்தது. ஓஎஃப்பி உலக அளவில் ஆயுதத் தயாரிப்பில் முப்பத்து மூன்றாவது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தனியார் நிறுவனங்களிடம் ஓஎஃப்பி ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் பீரங்கிகள், கனரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ராணுவ வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் தயாரிக்க மத்திய மோடி அரசு தொலைநோக்கு இலக்கை நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து டில்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தேவைப்படும்பட்சத்தில் எதிர்காலத்தில் ஓஎஃப்பி-ஐ கட்டுப்படுத்தும் 7 தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதி அளித்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
![]()
|
ஆயுத விற்பனை மூலமாக எதிர்காலத்தில் இந்தியாவுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு ஓஎஃப்பி தனியார் மயமாக்கல் உதவிகரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement