வாஷிங்டன்: வெளிநாட்டவர்களின் அத்தியாவசமற்ற பயணங்களுக்கு 18 மாதங்களாக இருந்த தடையை நவ., 8 முதல் விலக்குகிறது அமெரிக்கா. முழுமையாக 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போட்ட ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாட்டினர் விமானம் மற்றும் தரைவழிப் போக்குவரத்து மூலம் அமெரிக்காவுக்கு வருகை தரலாம் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
![]()
|
இது பற்றிய தகவலை அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதனை வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய விதிகளின்படி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதில்லை.
![]()
|
இந்நிலையில் நவம்பர் 8 முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சில கட்டுப்பாடுகளுடன் அமெரிக்கா அனுமதிக்க உள்ளது. அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எடுத்த கோவிட் நெகடிவ் பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும். பயணம் முழுக்க முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தொற்று ஏற்பட்டால் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறிவதற்காக மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணை தர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement